இராமேஸ்வரம் அருகே 300 கிலோ கடல் அட்டை பறிமுதல்..

இராமேஸ்வரம் மெரைன் போலீசார் இராமேஸ்வரம், தனுஷ்கோடி கடல் பகுதிகளில் இன்று காலை தீவிர ரோந்து சென்றனர். அப்போது சேராங்கோட்டை கடற்கரை  பகுதியில் சாக்கு பைகள் கிடந்தன. அவற்றை பிரித்து பார்த்த போது நன்கு உலர வைத்த கடல் அட்டைகள் இருந்தன. சேரான் கோட்டை கடல் மார்க்கமாக இலங்கைக்கு கடத்த இருந்த 250 கிலோ கடல் அட்டையின் சர்வதேச மதிப்பு ரூ.2. 5லட்சம்.

தடை செய்யப்பட்ட அரிய வகை கடல் அட்டைகளை இலங்கைக்கு கடத்த முயன்று தப்பியவர்கள் குறித்து மெரைன் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின் றனர். கடந்த சில நாட்களில் ரூ.12.5 மதிப்பிலான 1,200 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.