கமுதி அருகே கோயில் திருவிழாவுக்கு வந்த வாலிபர் கொடூரக் கொலை ..

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கே.வேப்பங்குளத்தைச் சேர்ந்தவர் முனியசாமி. இவரது மகன் நாகமணி, 30. திருமணம் ஆகவில்லை. கடந்த ஐந்தாண்டுகளுக்கு மேலாக மதுரையில் வசித்து வருகிறார். அங்கு கூலி வேலை செய்து வந்தார். கோவிலாங்குளத்தில் நேற்று நடந்த அரியநாச்சி அம்மன் கோயில் எருது கட்டு விழாவில் பங்கேற்பதற்காக மதுரையைச் சேர்ந்த நண்பர்களுடன்  இவர் கிராமத்திற்கு வந்தார். விழாவையட்டி இரவில் நடந்த கலைநிகழ்ச்சி முடிந்த பிறகு நீண்ட நேரமாகியும் நாகமணி வீட்டிற்கு வரவில்லை. இதனால் அவரை அவரது உறவினர்கள், நண்பர்கள் விடிய, விடிய தேடி வந்தனர். இன்று காலை அங்குள்ள குண்டுகுளம் கண்மாய் காட்டு கருவேல் மரங்களுக்கு இடையில் முகம் சிதைந்து அரிவாளால் வெட்டப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட நிலையில் நாகமணி உடல் கிடந்தது.

கமுதி காவல் துணை கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம், இன்ஸ்பெக்டர் சரவனண் தலைமையில் போலீசார் நாகமணி உடலை கைப்பற்றினர். நாகமணி மீது மதுரை சரக காவல் எல்லைக்குள் சில வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால் முன் விரோதம் காரணமாகவோ அல்லது பழிக்குப்பழியாக நாகமணியை அவருடன் வந்த மதுரை நண்பர்கள் கொலை செய்திருக்கலாம். அல்லது மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.