மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவுக்கு 9 பேர் பலியாகினர்.

மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவுக்கு 9 பேர் பலியாகினர். பலியானவர்களில் 8 பேர் குழந்தைகள். ஒருவர் பெண்.

இதுகுறித்து மணிப்பூர் அதிகாரிகள் தரப்பில், ”மணிப்பூரின் மேற்குப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. தலைநகர் இம்பாலுக்கு 96 மைல் தொலைவில் அமைந்துள்ள டெமென்ங்லாக்கில் ஏற்பட்ட நிலச்சரிவில் 9 பேர் பலியாகினர். பலியானவர்களில் 8 பேர் குழந்தைகள். இறந்தவர்களில் 7 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. ஒருவர் பெண். இந்த நில நடுக்கத்தினால் பல வீடுகள் சரிந்துள்ளன. இதில் பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்க தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகிறது”என்றார்.

நிலச்சரிவினால் ஏற்பட்ட உயிரிழப்புக்கு மணிப்பூர் முதலவர் பிரன் சிங் வேதனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, ”இந்த இறப்புச் செய்தி வருத்தத்தைத் தருகிறது. தொடர்ந்து மீட்புப் பணி நடந்து வருகிறது” என்று கூறியுள்ளார்.

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..