Home செய்திகள் கொடைக்கானலில் டோபிகானலில் உள்ள பெரிய காளியம்மன் கோயிலில் உண்டியல் உடைப்பு..- வீடியோ செய்தி..

கொடைக்கானலில் டோபிகானலில் உள்ள பெரிய காளியம்மன் கோயிலில் உண்டியல் உடைப்பு..- வீடியோ செய்தி..

by ஆசிரியர்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சமீபகாலமாக கோவில்களில் அடிக்கடி உண்டியல் உடைத்து திருட்டு சாமி நகைகள் திருட்டு மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் திருடு போகின்றன காரணம் இந்த இடங்களில் சிசிடிவி காமிராக்கள் இல்லாத காரணத்தால் இது போன்ற தொடர் திருட்டு நடக்கின்றது இந்த நிலையில் நேற்று இரவு டோபிகானலில் உள்ள பெரிய காளியம்மன் கோயிலில் இரும்பு கேட்டின் பூட்டை உடைத்து மர்ம ஆசாமிகள் உள்ளே சென்று உண்டியலில் உள்ள பணங்களையும் சாமி சிலையில் போடப்பட்டிருந்த தங்க தாலியும் மற்றும் வெள்ளி நகைகள் உள்பட அனைத்தையும் திருடி அருகில் நின்ற இரண்டு சக்கர வாகனத்தையும் திருடிச்சென்றனர்.

இன்று வழக்கம் போல் கோவிலை திறப்பதற்காக கோவில் கமிட்டியை சேர்ந்த பூசாரி வந்தபோது கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து அருகில் உள்ள பகுதி பொதுமக்களுக்கு மக்களுக்கு தெரிவிக்கப்பட்டு காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கொடைக்கானல் காவல்துறையினர் வந்து பார்த்து விட்டு புகார் கொடுக்கும்படி கூறியதை அடுத்து பகுதி பொதுமக்கள் சார்பாக காவல் நிலையத்தில் புகார் செய்ததின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருடு போன நகையின் மதிப்பு சுமார் ரூபாய் ஒன்றரை லட்சத்துக்கும் மேல் இரண்டு சக்கர வாகனத்தின் மதிப்பு ரூபாய் ஒரு லட்சத்திற்கும் மேல் மதிப்பு என்பது குறிப்பிடதக்கது.

இது பற்றி சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் அன்னைதெரசாள் நகர் பகுதியில் உள்ள அந்தோணியார் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருடியதாகவும் இதை காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை என்பதாகவும் கோவில்களில் காமிரா இல்லாத காரணத்தை தெரிந்துகொண்டு திருடுகிறார்கள் இதை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு சக்திவேல் தலைமையில் எடுத்து இது போன்ற செயல்களில் ஈடுபடும் திருடர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் கொடைக்கானலில் முன்பு இப்படித்தான் அடிக்கடி கோவில்களில் திருடு போனது தற்போது இதேபோல் மீண்டும் ஆரம்பிக்கபட்டுள்ளது கொடைக்கானலில் கோவில்கள் மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்கள் நிறைய உள்ளன இந்த இடங்களில் காவல்துறையினர் சென்று சிசிடிவி காமிராக்கள் பொருத்த வலியுறுத்தவேண்டும் என்று கூறினார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!