சட்ட விரோதமாக பதுக்கிய 3 ஆயிரம் மது பாட்டில்கள் பறிமுதல் 8பேர் கைது ..

இராமேஸ்வரம் பகுதிகளில் இரவு பகலாக சட்ட விரோத மது  விற்பனை அதிகரித்து வருவதாக மது விலக்கு  போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இத்தகவலையடுத்து மது விலக்கு கூடுதல் எஸ்.பி., வெள்ளைத்துரை தலைமையில் போலீசார் ராமேஸ்வரம்  தீவு முழுவதும்  பல்வேறு இடங்களில் இன்று காலை தீவிர சோதனை மேற்கொண்டனர்.

இச்சோதனையில் சட்ட விரோதமாக விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மது பாட்டில்களை சட்ட விரோதமாக  பதுக்கிய  முனியாண்டி, கனேசன் உளபட 8 பேரை கைது செய்தனர். தப்பி ஓடிய  முக்கிய குற்றவாளி ரவியை தனிப்படை அமைத்து தீவிரமாகதேடி வருகின்றனர்.

சத்திய பாதை மாத இதழ் ..

சத்திய பாதை மாத இதழ் ..

சத்தியம் வந்தது… அசத்தியம் அழிந்தது..