ராமநாதபுரத்தில் ஜூலை 19ல் தடகள விளையாட்டு போட்டி ..

தமிழ்நாடு அரசு பொன் விழா ஆண்டை முன்னிட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஜூலை 19ல் தடகளப் போட்டிகள் நடத்தப்படுகிறது. ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் ஜூலை 19 காலை 8 மணிக்கு 100 மீ., ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் போட்டி நடைபெற உள்ளது. போட்டியில் பங்கேற்க 2017 டிச., 31 அன்று 21 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும். வயது சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்.

போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் சொந்த மாவட்டத்திற்காகவோ, பணி புரியும் மாவட்டத்திற்காகவோ, பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாவட்டத்திற்காகவோ தடகள போட்டிகளீல் அனுமதிக்கப்படுவர். சான்று சமர்ப்பிக்கப்பட வேண்டும். மாவட்ட போட்டிகளில் முதலிடம் பெறும் வீரர், வீராங்கனைகள் மாநில போட்டிகளில் பங்கேற்க அரசு செலவில் அனுப்பப்படுவர். மாநில அளவில் முதலிடம் பெறுபவருக்கு முதல் பரிசாக ரூ.50 ஆயிரம் மற்றும் 4 கிராம் தங்கப்பதக்கம், 2ம் பரிசாக ரூ.25 ஆயிரம் மற்றும் 4 கிராம் தங்கப்பதக்கம், 3ம் பரிசாக ரூ.10 ஆயிரம் மற்றும் 4 கிராம் தங்கப்பதக்கம் வழங்கப்பட உள்ளது. பரிசு தொகை வெற்றி பெறுபவரின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ச.நடராஜன் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.