வறுமை நிலையிலும் சாலையில் கிடந்த 50 ஆயிரத்தை ஒப்படைத்த சிறுவனுக்கு காவல்துறை பாராட்டு…

ஈரோட்டில் சாலையில் கிடந்த 50 ஆயிரம் ரூபாயை ஒப்படைத்த சிறுவனுக்கு பாராட்டு குவிந்து வருகிறது. ஈரோடு சேமூர் பகுதியை சேர்ந்த பாட்சா, அபுரோஸ் பேகம் தம்பதியின் மகன் முஹம்மது யாஸீன், கனிராவுத்தர் குளம் பகுதியில் உள்ள அரசு நடுநிலை பள்ளியில் 2 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த சிறுவன் சாலையில் எவரோ தவற விட்டுச் சென்ற 50 ஆயிரம் ரூபாயை வகுப்பு ஆசியரியரிடம் ஒப்படைத்ததை அடுத்து அந்த பணம் தலைமை ஆசிரியர் மூலம் மாவட்ட காவல்துறை கண்கானிப்பாளர் சக்தி கணேஷ் வசம் ஒப்படைக்கப்பட்டது.

வறுமை நிலையிலும் பணத்துக்கு ஆசைப்படாத இந்த சிறுவனின் அரிய குணத்தை பாராட்டி பள்ளிச்சீருடை எடுக்க முடியாத சிறுவனின் வறுமை சூழலை உணர்ந்த அவர் தானே சீருடை எடுத்துத்தர உறுதியளித்துள்ளார். மேலும், இச்சிறுவனை பாராட்டி நிகழ்ச்சி நடத்தவும் காவல் துறையினர் முடிவு செய்துள்ளனர்.

பல கோடிகளுக்கு அதிபதியாக இருக்கும் செல்வந்தர்கள்  பணத்தின் மீதுள்ள மோகத்தால்  பிறரை ஏமாற்றி சம்பாதிக்கும் இன்றைய காலகட்டத்தில் இது போன்ற சம்பவங்கள் மனித நேயத்துக்கு உயிரோட்டம் கொடுக்கிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.