கணவரை இழந்த பெண்ணிடம் ரூ.1. லட்சம் மோசடி – 2 பெண்கள் கைது ..

இராமேஸ்வரம் மார்க்கெட் தெருவைச் சேர்ந்தவர் சக்திவேல். இவர் கடந்த சில ஆண்களுக்கு முன் இறந்து விட்டார். இவரது மனைவி சித்ரா, 40. இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கூலி வேலை செய்து வரும் சித்ராவிடம் சத்துணவு திட்டத்தில் சமையல் உதவியாளர் வேலை வாங்கித் தருவதாக அதே பகுதியைச் சேர்ந்த முனீஸ்வரி ஆசை வார்த்தை கூறி ரூ 1. லட்சம் பணம் பெற்றுக் கொண்டார். பல மாதங்களாகியும் வேலை வாங்கித் தராமலும், பணத்தை திரும்ப கொடுக்காமலும் முனீஸ்வரி ஏமாற்றி வந்தார்.

இது தொடர்பாக நேற்று முன் நடந்த வாக்குவாதத்தில் முனீஸ்வரி மற்றும் உறவினர்கள் சித்ராவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். சித்ரா புகார்படி காளீஸ்வரன் மனைவி முனீஸ்வரி 34, பழைய போலீஸ் ஸ்டேஷன் பகுதியைச் சேர்ந்த தனபாண்டியன் மனைவி தமிழரசி 36 ஆகியோர் மீது மோசடி, கொலை மிரட்டல் உள்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிந்து போலீஸ் சார்பு ஆய்வாளர் வேலம்மாள் கைது செய்தார். சித்ராவை தாக்கிவிட்டு தலைமறைவான கலைச்செல்வம், மகாலட்சுமி , காளீஸ்வரி ஆகியோரை இராமேஸ்வரம் கோயில் போலீசார் தேடி வருகின்றனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.