Home செய்திகள் அறிவோம் தலைவர்களை – ரமா பாய்..

அறிவோம் தலைவர்களை – ரமா பாய்..

by ஆசிரியர்

1858 ஆம் ஆண்டு கர்நாடகாவில் ஒரு பார்ப்பனக் குடும்பத்தில் பிறந்து, பார்ப்பனீயத்திற்கு எதிராகக் குரல் கொடுத்து, சூத்திரன் என்று சொல்லப்பட்ட ஓர் இளைஞனைக் கைப்பிடித்து, வடநாடு முழுவதும் சுற்றித் திரிந்து, பெண் கல்வி, பெண் விடுதலைக்காகத் தன் வாழ்வையே அர்பணித்துக் கொண்டவர் ரமா பாய்.

20ஆவது வயதில் தன் பெற்றோரையும், 25 ஆவது வதில் தன் கணவனையும் இழந்த பின்னும், நெஞ்சில் துணிவை இழக்காமல், அதற்குப் பிறகு 40 ஆண்டுகள் தன் இலட்சியத்திற்காகப் போராடி மறைந்தவர் அவர்.

ரிப்பன் பிரபுவுக்கு முன்னால் அவர் பெண் கல்வி குறித்து ஆற்றிய உரையால் ஈர்க்கப்பட்டு, இங்கிலாந்தும் அமெரிக்காவும் அவரை அரவணைத்தன. அவர் இந்தியாவில் கணவனை இழந்த இளம் பெண்களுக்காக ஓர் இல்லம் நிறுவி, அவர்களுக்குக் கல்வி கொடுத்து, ஊக்கம் கொடுத்து, அவர்களைச் சுய மரியாதையோடு வாழ வைத்தார். ஆனால் இவையெல்லாம், இந்து மதத்திற்கு எதிரானவை என்று கூறி திலகர் அவரைக் கண்டித்தார்.

நமக்கெல்லாம் திலகரைத்தான் தெரியும். ரமா பாயைத் தெரியாது!

நன்றி : பேராசிரியர் சுபவீ

தொகுப்பு அ.சா.அலாவுதீன்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!