மண்டபம் அந்தோணியார் ஆலய தேர்ப்பவனி …

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கோயில்வாடி புனித பதுவை அந்தோணிய தேவாலய 82ம் ஆண்டு தேர்ப்பவனி விழா நடந்தது. ஜூலை 2ம் தேதி விழா திருப்பலி மற்றும் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. இதையொட்டி தினமும் மாலை மறையுரை சிந்தனை நிகழ்த்தப்பட்டது . 9ம் நாளான நேற்று மாலை விழா சிறப்பு திருப்பலியை மண்டபம் பங்கு தந்தை ஜேசு ஜெயராஜ், மண்டபம் முகாம் பங்கு தந்தை பாஸ்கல் தனபால் ஆகியோர் நடத்தினர்.

இதை தொடர்ந்து வண்ண மின் விளக்குகளால் அலங்கரிப்பட்ட தேர்ப்பவனி வாண வேடிக்கைகள் அதிர புறப்பட்டது. கோயில்வாடி கடற்கரை வரை வழிபாட்டிற்கு எடுத்துச் செல்லப் பட்ட சொரூபம் கிறிஸ்தவ துதிப்பாடல்கள், பேன்ட் வாத்தியங்கள் முழங்க ஆலயம் வந்தடைந்தது. மண்டபம், மண்டபம் முகாம், பாம்பன், தங்கச்சிமடம், வேதாளை, உச்சிப்புளி பகுதிகளைக் சேர்ந்த பங்கு கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். மீனவர் சங்க பிரதிகள் அந்தோணி, தாசன், ஞானம் மற்றும் கோயில் கமிட்டி நிர்வாகிகள் ஏற்பாடு செய்தனர். 11/7/2018 அன்று விழா நிறைவு திருப்பலியுடன் கொடி இறக்கப்படுகிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.