இராமேஸ்வரம் நகராட்சி ஆணையருக்கு இராமநாதபுரம் நீதிமன்றம் பிடி ஆணை ..

சொத்து வரி விதிப்பு தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்கத் தவறிய இராமேஸ்வரம் நகராட்சி ஆணையருக்கு இராமநாதபுரம் சார்பு நீதிமன்றம் நீதிபதி பிடி ஆணை பிறப்பித்து உத்தவிட்டார்.

இராமேஸ்வரம் ரயில்வே பீடர் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சாந்தியம்மாள். இவர் அப்பகுதியிலுள்ள தன் சொத்திற்கு வரி கட்ட அனுமதிக்குமாறு ராமேஸ்வரம் நகராட்சி அலுவலகத்தில் கடந்த 2007ம் ஆண்டு மனு கொடுத்தார். நகராட்சி நிர்வாகம் வரி விதிப்பு செய்யாமல் காலதாமதம் செய்து வந்தனர். 

இது தொடர்பான வழக்கு ராமநாதபுரம் சார்பு நீதிமன்றத்தில் நடந்தது. வீட்டு வரி தொடர்பான பதிவு ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு இராமேஸ்வரம் நகராட்சி ஆணையருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆணையர் ஆஜர் ஆகாததால் பொது இடத்தில் தண்டோரா, நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இவ்விரு அறிவிப்பிற்கு பின்னரும் ஆணையர் ஆஜராகவில்லை. இந்த வழக்கு, ராமநாதபுரம் சார்பு நீதிபதி பிரீத்தா முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. ராமேஸ்வரம் நகராட்சி ஆணையருக்கு நீதிபதி பிரீத்தா பிடிஆணை பிறப்பித்து உத்தரவிட்டார். 

புனித ரமலான் வாழ்த்துக்கள்..