கோவில்பட்டியில் அண்ணன் தூக்கிட்டு தற்கொலை – அதிர்ச்சியில் தங்கை மரணம்…

கோவில்பட்டி சண்முகா நகரைச் சேர்ந்தவர் பரமசிவம். இவருக்கு முத்துப்பாண்டி, திருப்பதி, மகாலெட்சுமி, கற்பகவல்லி என்ற 4 பிள்ளைகள். திருப்பதியை தவிர மற்றவர்களுக்கு திருமணமாகி விட்டது. தோணுகால் தலையாரியாக திருப்பதி(37) பணிபுரிந்த நிலையில், சில காரணங்களால் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் கிடைத்தும் கிழக்கு காவல் நிலைய போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் குறுக்குசாலை அருகேயுள்ள அரசரடிகுமாரபுரத்தில் கணவர் ராஜாமித்தரனுடன் வாசித்து வந்த திருப்பதியின் சகோதிரி கற்பகவல்லிக்கு(31) தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த கற்பகவல்லி தனது கணவருக்கு செல்போனில் பேசிய படி மயக்கிவிழுந்;துள்ளார். அவரது உறவினர்கள் கற்பகவல்லியை மீட்டு தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் ஏற்கனவே கற்பகவல்லி உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அண்ணன் இறந்த செய்தி கேட்டவுடன் அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு கற்பகவல்லி உயிரிழந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

திருப்பதி அனைவரிடமும் அன்பாகவும், பாசத்துடன் பழகுவர் என்றும் தனது இரு தங்கைகளிடம் எப்போதும் பாசத்துடன் இருப்பார் என்றும் கூறும் உறவினர்கள், இருவரின் இறப்பு தங்களுக்கு பெரும் அதிர்ச்சியையும், துயரத்தினையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..