இராமநாதபுரம் அருகே கண்மாயில் ஆடு மேய்த்த புதுக்கோட்டை சிறுவன் மீட்பு ..

இராமநாதபுரம் அருகே கண்மாயில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த புதுக்கோட்டை சிறுவன் மீட்கப்பட்டு அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டான்.

இராமநாதபுரம் மாவட்டம் பாண்டியூர் கண்மாயில் 18 வயது சிறுவன் ஆடு மேய்த்துக்  கொண்டிருப்பதாக சைல்டு லைன் அமைப்பு நிர்வாகிகளுக்கு தகவல் கிடைத்தது.  இதைதொடர்ந்து ராமநாதபுரம் மனித வணிக கடத்தல் தடுப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகசாந்தி, சைல்டு லைன் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் கருப்பசாமி தலைமையில் குழுவினர் பாண்டியூர் கண்மாய்க்கு இன்று மாலை சென்றனர். அங்கு   கையில் கம்புடன் ஆடு மேய்த்துக்கொண்டிருவனை மீட்டனர்.

மேலும் அதிகாரிகள் விசாரணையில், புதுக்கோட்டை மாவட்டம் பேராவூரணி மில் தொழிலாளி செல்வராஜ் மகன் சூர்யா 18. அங்குள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்துள்ளார். குடும்ப வறுமையால், இராமநாதபுரம் அருகே இடையர்வலசை  முருகன் என்பவர் ஆடுகள் மேய்ப்பதற்காக அழைத்து வந்துள்ளார். அவரது வீட்டில் தங்கி கடந்த 20 நாட்களாக ஆடு மேய்த்த வந்த சூர்யா இன்று (ஜூலை 10) மாலை மீட்கப்பட்டார். ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் சுமன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். சூர்யாவை தொடர்ந்து படிக்கவும், பள்ளியில் சேர்க்கும் வரை ராமநாதபுரத்தில் உள்ள அரசு காப்பகத்தில் தங்க வைக்கவும் வருவாய் கோட்டாட்சியர் சுமன் சைல்டு லைன் அமைப்பினருக்கு அறிவுறுத்தினார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.