பெற்றோர் சுய சம்பாத்யத்தில் பிள்ளைக்கு உரிமை உண்டா – சபாஷ் சரியான தீர்ப்பு – அறிந்து கொள்வோம் சட்டம்..

தாய், தந்தைசுயமாக சம்பாதித்து கட்டிய வீட்டில், மகன் என்பதால், சட்டரீதியாக உரிமை கோர முடியாது. பெற்றோர்களின் அனுமதியளித்தால், கருணை அடிப்படையில் மட்டுமே மகன் தங்க முடியும் என டெல்லி உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.

தாய், தந்தை சுயமாக சம்பாதித்து கட்டிய வீட்டில், மகன் என்பதால், சட்டரீதியாக உரிமை கோர முடியாது. பெற்றோர்களின் அனுமதியளித்தால், கருணை அடிப்படையில் மட்டுமே மகன் தங்க முடியும் என டெல்லி உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.

டெல்லியைச் சேர்ந்த வயதான தம்பதி கீழ் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், தங்களது 2 மகன்களும், மருமகள்களும் எங்களுடன்தான் வசிக்கிறார்கள். ஆனால், எங்களுடன் அவர்கள் வாழும் காலம் நரகமாக எங்களுக்கு இருக்கிறது.

கடந்த 2007 ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டுவரை எங்களுக்கு சட்டரீதியாக போலீஸ் மூலம் தொந்தரவு கொடுத்து சொத்துக்களை அபகரிக்கபார்க்கிறார்கள். தங்களது சொந்த வீட்டில் தங்கி இருக்கும் மகனையும், மருமகளையும் வெளியேற உத்தரவிடக் கூறி நீதிமன்றத்தில் மனு செய்து இருந்தனர்.

இந்த மனுவில் கூறப்பட்டு இருந்த குற்றச்சாட்டுகளை மகன்களும், மருமகள்களும் மறுத்ததோடு, சொத்தில் தங்களுக்கும் உரிமை உண்டு என கோரினர். இந்த வழக்கை விசாரணை செய்த, கீழ் நீதிமன்றம், வீட்டை மகன்கள் காலி செய்ய உத்தரவிட்டு, வயதான பெற்றோருக்கு சாதகமாக தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து, இரு மகன்களில் ஒருவரும், அவரின் மனைவியும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அந்த மனுவில் தங்களின் பெற்றோரின் வீட்டில் தங்களுக்கு பங்கு உண்டு, என்றும் வீட்டை காலி செய்யும் உத்தரவை ரத்து செய்யக்கோரியும் ெதரிவித்து இருந்தனர்.

இந்த மனுமீதான விசாரணை முடிந்து நீதிபதி பிரதிபா ராணி நேற்று தீர்ப்பளித்தார். அவர் அளித்த தீர்ப்பில் கூறியது.

பெற்றோர்கள், அதாவது தாயும், தந்தையும் சுயமாக சம்பாதித்து கட்டிய வீட்டில், மகன் என்ற காரணத்துக்காக திருமணம் ஆகி இருந்தாலும் அல்லது திருமணம் ஆகாவிட்டாலும், அந்த வீட்டில், உரிமை கோர முடியாது.

பெற்றோர்கள் அனுமதிக்கும் பட்சத்தில், அவர்களின் கருணையின் அடிப்படையில்தான் மகன், மகனின் குடும்பத்தினர் தங்கி இருக்க முடியும்._ _அதிலும் பெற்றோர்களுக்கும், மகனுக்கும், இடையிலான உறவு சமூகமாக இருக்கும் வரை அந்த வீட்டில் மகன் குடியிருக்க முடியும். வாழமுடியும்.

ஒருவேளை பெற்றோர்களுக்கும், மகனுக்கும் இடையே உறவில் விரிசல் ஏற்படும்பட்சத்தில், பெற்றோர் வாழ்நாள் முழுவதும் மகனை சொந்த வீட்டில் தங்கவைக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. அந்த சுமையையும் சுமக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஆதலால், இரு மகன்களும் உடனடியாக அந்த வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என உத்தரவிட்டார். மேலும், மகன் தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்தார்.