மாரியூரில் சோலார் மின் உற்பத்தி திட்டம் பணிகள் ஜரூர்…

கடலாடி ஒன்றியத்திற்குட்பட்ட மாரியூர் ஊராட்சியில், மத்திய அரசு மற்றும் மாநில அரசின் நிதி பங்களிப்புடன், மரபு சாரா எரிசக்தி துறையின் சார்பில் சோலார் மின் உற்பத்தி மையம் அமைக்கும் பணிகள் ஜரூராக நடந்து வருகிறது. கடந்த பிப்., மாதம் சோலார் மின் உற்பத்தி கருவிகள் அமைப்பதற்கான பூமி பூஜைகள் நடந்தது. அரசின் உத்தரவின் படி ஏற்கனவே உப்பளங்கள் இருந்த இடத்தில் 50 ஏக்கரில் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு பாதுகாப்பு வேலிகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. டைட்டில் பார்க் தனியார் நிறுவனம் மேற்கொண்டு உள்ளது.

இங்கு சோலார் மின்தகடுகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் 10 மெகா வாட் திறனுள்ளமின்சாரம், அருகே உள்ள வாலிநோக்கம் துணை மின் நிலையத்திற்கு வழங்கப்பட உள்ளது. அலுவலர் ஒருவர் கூறியதாவது;எதிர்காலத்தில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் நிறைவேற்ற உள்ளோம்.இது 2011ம் ஆண்டில் மாநில அரசின் மாதிரித்திட்டமாக உள்ளது.50 சதவித பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இதன்மூலம் சுற்றுவட்டார கிராமமக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது என்றார்.