Home செய்திகள் மூதாட்டியின் சிறுநீரகப் பையில் இருந்த 47 கற்கள் அகற்றம் இராமநாதபுரம் அரசு மருத்துவமனை டாக்டர் சாதனை..

மூதாட்டியின் சிறுநீரகப் பையில் இருந்த 47 கற்கள் அகற்றம் இராமநாதபுரம் அரசு மருத்துவமனை டாக்டர் சாதனை..

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே விளங்களத்தூரைச் சேர்ந்த இருளன் மனைவி உடையாள், 67. கடந்த சில வாரங்களாக இவர் சிறுநீர் கழிக்கும் போது அவதியடைந்தார். சிறுநீரகப் பாதையில் எரிச்சலுடன் கூடிய வலி அதிகரித்தது. இதையடுத்து சிகிச்சைக்காக இராமநாதபுரம் அரசு மருததுவனைக்கு உடையாள் – அழைத்து வரப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் அவரது சிறுநீரகப் பையில் கற்கள் அடைப்பு இருந்தது தெரிய வந்தது. சிறுநீரகப் பையில் இருந்த கற்களை முதல்வர் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் அப்புறப்படுத்த டாக்டர்கள் முடிவு செய்தனர்.

அரசு மருத்துவ மனை கண்காணிப்பாளா டாக்டர் ஜவகர்லால் ஆலோசனையின் பேரில் அரசு மருத்துமனை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் அறிவழகன் தலைமையில் மருத்துவக் குழுவினர் அறுவை சிகிச்சை செய்தனர். உடையாள் சிறுநீரகப் பையில் இருந்த 47 கற்கள் அகற்றப்பட்டது டாக்டர்கள் குழு கூறுகையில ‘ 40 வயது கடந்தோர் தினமும் 4 – 5 விட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் பாட இடைவெளி நேரத்தில் கட்டாயம் சிறுநீர் கழிக்க வேண்டும், எக்காரணம் கொண்டும் சிறுநீரை அடக்கி வைக்கக் கூடாது. உப்பு நீரை அப்பளம், வடகம், வத்தல் , ஊறுகாய் ஆகியவற்றை சாப்பாட்டில் தவிர்க்ச வேண்டும் என்றனர் –

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!