சட்டபேரவை குழுக்கள் நியமனம்: பேரவை தலைவர் தனபால் அறிவிப்பு..

தமிழக சட்ட பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் பேரவை தலைவர் தனபால் அறிவித்த பல்வேறு குழுக்களுக்கான  உறுப்பினர்கள் பட்டியல்.  பேரவையின் மதிப்பீட்டு குழுவிற்கு தோப்பு வெங்கடாசலம் தலைமையில் பொன்முடி( திமுக) உள்ளிட்ட 16 உறுப்பினர்களை அறிவித்தார். பொதுக்கணக்கு குழு தலைவராக எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் தலைமையில் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி.ராஜா, அபுபக்கர் உள்ளிட்ட உறுப்பினர்களை அறிவித்தார். பொது நிறுவனங்கள் குழு தலைவராக செம்மலை தலைமையில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சேகர்பாபு, பிச்சாண்டி, கோவி செழியன், மஸ்தான் உள்ளிட்டவர்களை அறிவித்தார். உரிமை குழு தலைவராக சட்ட பேரவை துணை தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் நரசிம்மன், குமரகுரு, ராஜன் செல்லப்பா, சரஸ்வதி, ரகுபதி, ஆஸ்டின், பெரியண்ணன் அரசு, விஜயதரணி உள்ளிட்டவர்களை அறிவித்தார்.

அலுவல் ஆய்வு குழுவில் ஏற்கனவே உள்ளவர்களை நீடிப்பார்கள் என்றும், சட்டவிதிகள் ஆய்வு குழுவிற்கு சு.ரவி தலைமையில் ஜக்கையன், மனோ தங்கராஜ், பிரகாஷ் உள்ளிட்டவர்களை அறிவித்தார். உறுதி மொழி குழு தலைவராக இன்பதுரை, அவைக்குழு தலைவராக தென்னரசு, பேரவை விதிகள் குழுவிற்கு பேரவை தலைவர் தனபால், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், பேரவை துணை தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், எதிர்க் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டவர்களை அறிவித்தார்.மனுக்கள் குழு தலைவராக அரசு கொறடா ராஜேந்திரன், நூலக குழுவிற்கு அருண் குமார், ஏடுகள் குழுவிற்கு டிடிவி.தினகரன், சத்திய நாராயணன் உள்ளிட்டவர்களை அறிவித்தார்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..