கொடைக்கானலில் தீயணைப்பு படையினர் திடீர் ஒத்திகை இதை சற்றும் எதிர்பாராத பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி!!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள தீயணைப்பு படையினர் கொடைக்கானல் முக்கிய இடமான சுற்றுலா பயணிகள் வாகனநிறுத்த கலையரங்கபகுதியில் கொடைக்கானல் வருவாய் கோட்டாச்சியர் மோகன் மற்றும் வட்டாச்சியர் பாஷ்யம் தலைமையில் திடீரென தீயணைப்பு வீரர்கள் தீயில் மாட்டிக்கொண்டால் எப்படி தப்பிப்பது என்றும் விபத்தில் மாட்டிக் கொண்டவர்களை எப்படி உடனே காப்பாற்றுவது என்பது குறித்து பல சாகசங்கள் செய்து காண்பித்தனர்.  இதை சற்றும் எதிர்பாராத சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர் காரணம் யாரிடமும் சொல்லாமல் துண்டு பிரசுரங்களை கொடுக்காமல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

 இது பற்றி நமது செய்தியாளர் கொடைக்கானல் வருவாய் கோட்டாசியர் மோகன் அவர்களிடம்  கேட்டதிற்கு அவர் கூறியதாவது, திடீரென்று நிகழ்ச்சி நடந்தது இதனால் யாருக்கும் சொல்லவில்லை, அடுத்த முறை அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில்  தெரியப்படுத்தி இதை பெரிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சி செய்கிறோம் என்றார்.

மேலும் இது பற்றி கொடைக்கானல் தீயணைப்பு நிலைய அலுவலர் குணசேகரன் கூறுகையில் தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள திண்டுக்கல் மாவட்ட ஆட்சியாளர் உத்தரவுபடி ஆர் டி ஓ மற்றும் தாசில்தார் முன்னிலையில் தீயணைப்புத்துறை மற்றும் மீட்பு பணிகள் பேரிடர் மீட்பு பணிகள் என பொதுமக்கள் கூடும் இடத்தில் வீரர்களை வைத்து  தீயில் சிக்கி கொண்டால் எப்படி காப்பாற்ற வேண்டும் வெள்ளத்தில் சிக்கி தவித்தால் எப்படி அவர்களை காப்பாற்ற வேண்டும் என்று நேரடியாகவே பொதுமக்கள் முன்னிலையில் விழிப்புணர்வு              கொடுக்கிறோம். மேலும் அடுத்த முறை பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த துண்டு பிரசுரங்களை கண்டிப்பாக          வழங்குவோம் என்றார்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..