அமைச்சர் வேலுமணி ஊழல் செய்துவிட்டதாக அதிமுக முன்னாள் எம்எல்ஏ குற்றச்சாட்டு..

தமிழக அமைச்சர் வேலுமணி ஊழல் செய்துவிட்டதாக அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆதாரத்துடன் புகார் எழுப்பியுள்ளார்.

தமிழகம் முழுவதும் தெரு விளக்குகளில் மெர்குரி பல்புகளுக்குப் பதிலாக எல்.இ.டி பல்புகளை மாற்றியதில் 600 கோடி ரூபாய்க்கு மேல் சுருட்டிவிட்டதாக தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

‘மின் சிக்கனத்தைக் கடைபிடிக்கும் நோக்கத்தில், தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி கட்டுப்பாட்டில் உள்ள தெரு விளக்குகள் அனைத்திலும் உள்ள மெர்குரி பல்புகளை எல்.இ.டி பல்புகளாக மாற்றுவதற்கு 2014-ல் அன்றைய முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டார். அதற்காக ரூ.1,365 கோடி ஒதுக்கீடு செய்தார். இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த டெண்டர்விடப்பட்டது. இதில் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி, 600 கோடி ரூபாய்க்கு மேல் சுருட்டிவிட்டார்” என்கிறார், சேலத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ-வான வெங்கடாசலம்.

இந்தத் திட்டத்தில் ஊழல் நடந்துள்ளது என்பதற்கு உதாரணமாக ஒன்றைச் சொல்கிறேன்.

சேலம் மாநகராட்சியிலிருந்து, இதற்கான டெண்டர் விவரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பெற்றேன். இவர்கள் டெண்டர் விட்டு வாங்கிய பொருள்களின் விலையும், அதே பொருள்களுக்கான இந்திய அளவில் பிரபலமான நிறுவனங்களின் கொட்டேஷன் மதிப்பையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இதில் பெரிய அளவில் ஊழல் நடந்திருப்பது தெரிய வந்திருக்கிறது.

சேலம் மாநகராட்சியில் எல்.இ.டி தெருவிளக்குகள் போடுவதற்கு 08.08.2014-ல் திருநெல்வேலியைச் சேர்ந்த ஆகாஷ் இன்ஜினியரிங் அசோசியேட்ஸ் என்ற நிறுவனத்துக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. இதில், 20 வாட்ஸ் கொண்ட 22,037 எல்.இ.டி தெரு விளக்குகளை வாங்கிப் போட்டிருக்கிறார்கள். ஒரு எல்.இ.டி பல்பின் விலை 6,950 ரூபாய் என்று டெண்டரில் குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால், அன்றைய தேதியில் இந்தியாவில் உள்ள பிரபலமான எல்.இ.டி கம்பெனியான டெல்லி இந்தியா பையிங் நிறுவனம் 20 வாட்ஸ் எல்.இ.டி தெருவிளக்கு ஒன்றை 904 ரூபாய்க்கும், டெல்லி மொக்ஹிலிஸ் நிறுவனம் 965 ரூபாய்க்கும், நொய்டா மாக்ஸ்ஹி நிறுவனம் 1,995 ரூபாய் என்ற விலைக்கும் கொடுக்கின்றன.!

இதில், அதிகபட்சமாக 1,995 ரூபாய் என்று எடுத்துக் கொண்டால்கூட ஒரு எல்.இ.டி லைட்டுக்கு குறைந்தது 5,000 ரூபாய் சுருட்டியிருக்கிறார்கள். அப்படியென்றால், 22,037 பல்புகளுக்கு 11,01,85,000 ரூபாய் ஊழல் நடந்துள்ளது….!

அதேபோல, 439 எல்.இ.டி கன்ட்ரோலர்களைப் போட்டிருக்கிறார்கள். இதில், ஒரு எல்.இ.டி கன்ட்ரோலரின் விலை 21,500 ரூபாய் என்று டெண்டரில் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், பெங்களூரு டெக்னோ ஸ்ப்ரே ரூ.450-க்கும், சண்டிகார் சோலாரேஜ் ரூ.500-க்கும், டெல்லி மோக்ஸி ரூ.450-க்கும் இதைக் கொடுக்கின்றன. அதிகபட்சமாக 500 ரூபாய் என்று எடுத்துக் கொண்டாலும் ஒரு எல்.இ.டி கன்ட்ரோலருக்கு 21,000 ரூபாய் சுருட்டியுள்ளனர்.!

அப்படியென்றால் 439 கன்ட்ரோலருக்கு 92,19,000 ரூபாயைச் சுருட்டியுள்ளனர்..!

அடுத்ததாக, எட்டு கே.வி.ஏ சிங்கிள் பேஸ் வோல்டேஜ் கன்ட்ரோலர் போட்டுள்ளனர். மொத்தம் 1,105 வோல்டேஜ் கன்ட்ரோலர்கள். சிங்கிள் பேஸ் வோல்டேஜ் கன்ட்ரோலர் ஒன்றின் விலை ரூ.47,295 என்று டெண்டரில் குறிப் பிட்டுள்ளனர்…!

ஆனால், செர்வோ ஸ்டார் ரூ.6,000-க்கும், பஞ்சாப் ஹர்ஷ் எலெக்ட்ரிகல்ஸ் நிறுவனம் ரூ.7,000-க்கும், உத்தரப் பிரதேசத்தின் டெஸ்டா எலெக்ட்ரிக் ரூ.4,500-க்கும் இதைக் கொடுக்கின்றன.!

இதில் அதிகப்படியாக 7,000 ரூபாய் என்று வைத்துக் கொண்டாலும், 1,105 சிங்கிள் பேஸ் வோல்டேஜ் கன்ட்ரோலருக்கு 4,45,25,975 ரூபாயைச் சுருட்டியுள்ளனர்…!

அடுத்ததாக, 21 கே.வி.ஏ த்ரீ பேஸ் வோல்டேஜ் கன்ட்ரோலர் 152 போட்டுள்ளனர்…!

இந்த கன்ட்ரோலரின் விலை ரூ.1,18,815 என்று டெண்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், செர்வோ ஸ்டார் ரூ.3,000-க்கும், நியூட்ரிக் ரூ.9,500-க்கும் இதைக் கொடுக்கின்றன.!

இதில், அதிகப்படியாக 9,500 ரூபாய் என்று எடுத்துக்கொண்டாலும் 152 த்ரீ பேஸ் வோல்டேஜ் கன்ட்ரோலருக்கு 1,66,00,000 ரூபாயைச் சுருட்டியுள்ளனர்…!

* எனக்குக் கிடைத்த கொட்டேஷன்படி பார்த்தால் ஒரு மாநகராட்சிக்கு மட்டும் குறைந்தது 25 கோடி ரூபாயைச் சுருட்டியுள்ளனர். தமிழகம் முழுவதும் 600 கோடி ரூபாய்க்கு மேல் சுருட்டியுள்ளனர். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்போகிறேன்’’ என்றார்…!

அடுத்ததாக, 21 கே.வி.ஏ த்ரீ பேஸ் வோல்டேஜ் கன்ட்ரோலர் 152 போட்டுள்ளனர்…!

இந்த கன்ட்ரோலரின் விலை ரூ.1,18,815 என்று டெண்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், செர்வோ ஸ்டார் ரூ.3,000-க்கும், நியூட்ரிக் ரூ.9,500-க்கும் இதைக் கொடுக்கின்றன.!

இதில், அதிகப்படியாக 9,500 ரூபாய் என்று எடுத்துக்கொண்டாலும் 152 த்ரீ பேஸ் வோல்டேஜ் கன்ட்ரோலருக்கு 1,66,00,000 ரூபாயைச் சுருட்டியுள்ளனர்…!

எனக்குக் கிடைத்த கொட்டேஷன்படி பார்த்தால் ஒரு மாநகராட்சிக்கு மட்டும் குறைந்தது 25 கோடி ரூபாயைச் சுருட்டியுள்ளனர். தமிழகம் முழுவதும் 600 கோடி ரூபாய்க்கு மேல் சுருட்டியுள்ளனர். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்போகிறேன்’’ என்றார்…!

புனித ரமலான் வாழ்த்துக்கள்..