முகம்மது சதக் ஹமிது பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி துவக்க விழா ..

இராமநாதபுரம் மதுரை இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள போக்குவரத்து நகரில் அமைந்துள்ள முகம்மது சதக் ஹமிது கலை மற்றும் அறிவியல் கல்லூரி துவக்க விழா நடைபெற்றன.  கல்லூரி சேர்மன் பேசுகையில்,  இக்கல்லூரியில் மாணவிகளை சேர்த்த பெற்றோர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இக்கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு ஒழுக்கம், ரிசல்ட், வேலை வாய்ப்பு கொடுப்பது தான் முதல் குறிக்கோள். அதே போல்  ஒழுக்கம் குறைத்தால் டிசியை கொடுத்து விடுவோம், பல்கலை கழக ராங்க் எடுத்தால் கல்வி கட்டணம் குறைக்கப்படும், மார்க் வருகை பதிவேடு பற்றி ஒவ்வோரு மாதமும் இக்கல்லூரி அலுவலகத்தில் வந்து பெற்றோர்கள் தெரிந்து கொள்ளலாம்.

மேலும்  முகம்மது சதக் டிரஸ்ட் செயலாளர் சர்மிளா பேசுகையில், எங்களது சதக் அறக்கட்டளை 24 வருடங்களுக்கு மேல் உள்ளன பல கல்லூரிகளை உருவாக்கிய முன்னாள் தலைவர் ஹமீது அப்துல் காதர் பெயரில் தொடங்கப்பட்ட இக்கல்லூரி இப்பகுதி மக்களுக்கு பயன் உள்ளதாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  இக்கல்லூரியில் முதல் நாளில் அடி எடுத்து வைக்கும் மாணவிகள் நம்பிக்கையோடு கல்வியை பயில வேண்டும் என்றார்.

இந்நிகழ்ச்சியில் முகம்மது சதக் அறக்கட்டளை இயக்குநர் ஹமீது இபுராகிம்,  ஹபீப் முகம்மது,  அறக்கட்டளை உறுப்பினர் உசேன், ஜலால், முகம்மது அஸ்லம்,  செய்யது  ஹமீதா கல்லூரி முதல்வர் ரஜபுதீன்,  முகம்மது சதக் பொறியியல் கல்லூரி டீன் முகம்மது ஜஹுபர்,   முகம்மது சதக் பொறியியல் கல்லூரி முதல்வர் அப்பாஸ் முகைதீன்,  முகம்மது சதக் பாலிடெக்னிக் முதல்வர் அலாவுதீன்,  செய்யது ஹமீதியா அரபிக் கல்லூரி முதல்வர் அலிசா நூராணி, துணை விரிவுரையாளர்  சாஹின்,  முகம்மது சதக் கல்வியல் கல்லூரி முதல்வர் சோமசுந்தரம்,  சைடெக் முதல்வர் ரியாஸ்,  கல்லூரி முதல்வர் நாதிரா பானுகமால்,  சக்கரக்கோட்டை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நூர் முகம்மது ஆகியோர் கலந்து கொண்டனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..