இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்…

இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்  இராமேஸ்வரம் மீனவர்களை கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படை  விடிய, விடிய விரட்டியடிப்பு இரண்டு விசைப் படகுகளுடன் மீனவர்கள் சிறைபிடிப்பு
நேற்று (04/7/18) காலை இராமேஸ்வரத்தில் இருந்து இரண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் தொழிலுக்குச் சென்றனர்.  பகலில் இந்திய கடல் பகுதிகளில் மீன் பிடித்த இவர்கள் நேற்றிரவு கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க செல்ல முயன்றனர். இவர்களை கச்சத்தீவு அருகே செல்லவிடாமல் இரவு முழுவதும் மூன்றுக்கும் மேற்பட்ட இலங்கை ரோந்து கப்பல்களில் வந்த கடற்படையினர் விரட்டியடித்தனர்.
அதைத் தொடர்ந்து  இரண்டு விசைப் படகுகளை சிறைப்பிடித்தனர். அதிலிருந்த  10 க்கும் மேற்பட்ட மீனவர்களை கைது செய்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட  மீனவர்கள் மீன்வரத்து இன்றி கரை திரும்பினர். ராட்சத விளக்கின் உதவியுடன் படகுகளின் பதிவெ ண்ணை பதிவு செய்ததாகவும் கரை திரும்பிய மீனவர்கள் குற்றஞ்சாட்டினர்.
செய்தியாளர். முருகன்..

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.