Home செய்திகள் இராமநாதபுரத்தில் விவசாயிகள் சங்கம் சார்பில் மாநில அளவிலான உழவர் தின பேரணி மற்றும் நினைவஞ்சலி கூட்டம்…

இராமநாதபுரத்தில் விவசாயிகள் சங்கம் சார்பில் மாநில அளவிலான உழவர் தின பேரணி மற்றும் நினைவஞ்சலி கூட்டம்…

by ஆசிரியர்

இராமநாதபுரத்தில் விவசாயிகள் சங்கம் சார்பில் மாநில அளவிலான உழவர் தின பேரணி மற்றும் நினைவஞ்சலி கூட்டம் மாநில தலைவர் வழுக்கு பாறை பாலு தலைமையில் நடைபெற்றது.  இக்கூட்டத்திற்கு  புன்னதாக இராமநாதபுரம் அரண்மனையிலிருந்து 1000 க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் குடும்பத்துடன் பங்கேற்ற பேரணி துவங்கியது,  இப்பேரணியை மாநில பொதுச் செயலாளர் கந்தசாமி துவக்கி வைத்தார்.

அதைத் தொடர்ந்து  அப்பேரணியானது சாலை தெரு மதுரை ரோடு, வழியாக கூட்டம் நடைபெறும் மஹாலில் நிறைவடைந்தது. அப்பேரணியில் வந்த விவசாயிகள் வேளாண் விளை பொருள்களுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்ய வேண்டும், விவசாயிகளுக்கு உயிர் காப்பீடு திட்டத்தை அமுல்படுத்த வேண்டும், இந்திய நாட்டில் பெட்ரோலியம் மற்றும் மினரல்ஸ் பைப் லைன் சட்டம் 1962ஐ ரத்து செய்ய வேண்டும் , இந்திய டெலிகிராபி சட்டம் 1885ல் விவசாய நிலங்களில் உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைத்திட உள்ள வழித்தட உரிமையை ரத்து செய்ய வேண்டும், போலி உரங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், விவசாயிகள் வங்கிகளில் வாங்கிய அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியவாறு ஊர்வலத்தில் வந்தனர்.

பேரணியின் நிறைவாக திருமண மஹாலில் நடந்த கூட்டத்தில் மாநில பொருளாளர் சண்முகம் வரவேற்று பேசினார்,  மாநில பொதுச் செயலாளர் கந்தசாமி முன்னிலை வகித்தார், கோவை நன்னறி கழகம் தலைவர் இய கோகா சுப்ரமணியன் சிறப்புறை யாற்றினார். மாநில செயலாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

இப்பேரணியிலும்,  கூட்டத்திலும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர், இராமநாதபுரம் ஏ டிஎஸ்பி வெள்ளதுரை தலைமையில் இராமநாதபுரம் நடராஜன் மேற்பார்வையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!