Home செய்திகள்கீழக்கரை செய்திகள் ஒழுக்கத்தின் மறுபெயர் ஜப்பான்.. தோல்வியிலும் ஓழுக்கத்தை கடைபிடித்த ஜப்பானியர்..

ஒழுக்கத்தின் மறுபெயர் ஜப்பான்.. தோல்வியிலும் ஓழுக்கத்தை கடைபிடித்த ஜப்பானியர்..

by Mohamed

21 வது கல்பந்து உலகக் கோப்பை ரசியாவில் நடைப்பெற்று வருகிறது.லீக் மேட்ச் நிறைவடைந்ததை ஒட்டி கால் இறுதிக்கான தகுதிச் சுற்று இன்று நிறைவடைய உள்ளது. நேற்று ஜபபான்,பெல்ஜியம் நாடுகளுக்கிடையே கடுமையான போட்டி நிலவியது.

ஆட்டத்தின் முதல் பகுதியில் எந்த அணிகளும் கோல் அடிக்கவில்லை. ஆனால் ஜப்பான் அணியினர் இரண்டாவது பகுதியில் முதல் 2 கோல்கள் அடித்து பலம் பொருந்திய பெல்ஜியம் அணியை அதிர்ச்சியடைய வைத்தனர்.

வாழ்வா?சாவா? என்ற நிலைக்கு தள்ளப்பட்ட பெல்ஜியம் அணி திறமையாக விளையாடி அடுத்தடுத்து 3 கோல்களை அடித்து கால் இறுதிக்கு தகுதி பெற்றனர். முதலில் 2 கோல் அடித்த ஜப்பான் அணியே வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் அனைவரும் எதிர்ப்பார்த்திருந்தனர்.

ஆனால் பெல்ஜியம் அணி 3க்கு 2 என்ற கோல் கணக்கில் ஜப்பான் அணியை தோல்வியுற செய்தது. எதிர்ப்பாராத தோல்வி ஜப்பானியர்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருந்த இந்த சோகமான நேரத்திலும் கூட விளையாட்டை காண வந்த ஜப்பான் நாட்டை சேர்ந்த பார்வையாளர்கள் போட்டி முடிந்து களைந்து செல்லும் முன் மைதானத்தின் இருக்கை பகுதிகளை வழக்கம் போல் சுத்தம் செய்து கொண்டிருந்தனர்.

இந்த சம்பவம் சக பார்வையாளர்களுக்கு மத்தியில் நெருடலை ஏற்படுத்தியதோடு, எந்த நேரத்திலும் சுத்தத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து சுற்றுப்புறச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்பதையும் ,ஜப்பானியர்களின் சமூக உணர்வுகளையும் நம் அனைவருக்கும் உணர்த்துகிறது. ஆனால் நம் நாட்டின் நிலையோ தலை கீழ் மாற்றம், அரசியல் கட்சிகள்  மாநாடு நடத்தி முடிந்த பிறகு குப்பைகளின் கூடாரங்களாக பல நாட்கள் தேங்கிக்கிடப்பதை  தான்  பெரும்பாலும் பார்க்க முடிகிறது. இந்நிலை மாற  வேண்டுமென்றால், எண்ணங்கள் மாறாத  வரை      நம் நிலை மாறுவதில்லை என்பது உணர்ந்து செயல்பட்டால் மாற்றம் நிச்சயம்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!