Home அறிவிப்புகள்அரசு அறிவிப்பு கழிவறை, படுக்கை வசதியுடன் கூடிய தமிழக அரசு சொகுசு பேருந்தில் கட்டணம் எவ்வளவு?

கழிவறை, படுக்கை வசதியுடன் கூடிய தமிழக அரசு சொகுசு பேருந்தில் கட்டணம் எவ்வளவு?

by ஆசிரியர்
தமிழக அரசு புதிதாக அறிமுகப்படுத்தி இருக்கும் சொகுசு பஸ் அனைத்து வசதிகளையும் கொண்ட பஸ் ஆகும்.  இதில் பயணிக்க அனைவருக்கும் ஆவல், ஆதலால் அதன் கட்டணத்தை அறிந்து கொள்வது அவசியம்.
இந்த சொகுசு பஸ்ஸில் சென்னையில் இருந்து மதுரைக்கு ஏ.சி. படுக்கை கட்டணம் ரூ.975, சேலம் ரூ.725, போடிநாயக்கன்பட்டி ரூ.1110, ஈரோடு ரூ.905, கரூர் ரூ.820 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கோவை-பெங்களூர் இடையே இயக்கப்படும் ஏ.சி. படுக்கை வசதி பஸ்சுக்கு ரூ.805 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து 6 நகரங்களுக்கு ஏ.சி. படுக்கை வசதி பஸ் நேற்று முதல் இயக்கப்படுகிறது. சென்னை-மதுரை ஏ.சி வசதி அல்லாத படுக்கை வசதிக்கு ரூ.725, சென்னை- திண்டுக்கல் இடையே விடப்பட்டுள்ள கழிப்பிட வசதியுள்ள அல்ட்ரா டீலக்ஸ் பஸ்சுக்கு ரூ.500 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இதுகுறித்து விரைவு போக்குவரத்து கழக உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், விரைவு போக்குவரத்து கழகத்துக்கு 100 புதிய பஸ்கள் ஒதுக்குகிறார்கள். அதில் 40 ஏ.சி. படுக்கை வசதி பஸ்களாகும், 50 அல்ட்ரா டீலக்ஸ் (யூ.டி) பஸ்களில், 10 கழிவறை வசதி கொண்ட அல்ட்ரா டீலக்ஸ் பஸ்களாகும். இவற்றில் முதல் கட்டமாக 40 பஸ்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆகஸ்டு மாதத்துக்குள் மீதமுள்ள பஸ்கள் வந்து விடும். நீண்டதூரம் செல்லக்கூடிய பஸ்களில் பயணிகளுக்கு வசதிகளை செய்து கொடுத்தால் அதிகளவு பயணிப்பார்கள். புதிய சொகுசு பஸ்கள் விடப்பட்டதால் இனி பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!