‘லோக் ஆயுக்தா’ மசோதா நிறைவேற்ற அரசு முடிவு..

நாடு முழுவதும், அரசுத்துறைகளில் நடக்கும் ஊழல்களை விசாரிக்க, 2013ல், லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம் உருவாக்கப்பட்டது. இது, 2014 ஜன., 16ல் அமலுக்கு வந்தது.
லோக் ஆயுக்தா அமைப்புகள், 15 மாநிலங்களில் செயல்பட்டு வருகின்றன. தமிழகம், புதுச்சேரி உட்பட, 12 மாநிலங்கள், லோக் ஆயுக்தா சட்டத்தை இயற்றவில்லை.’லோக் ஆயுக்தா அமைக்கும் பணியை, தமிழக அரசு உடனடியாக துவங்க வேண்டும். இது தொடர்பான அறிக்கையை, ஜூலை, 10க்குள் தாக்கல் செய்ய வேண்டும்’ என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, தற்போது சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வருவதால், ‘லோக் ஆயுக்தா’ தொடர்பான சட்ட மசோதாவை நிறைவேற்ற, தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.