Home செய்திகள் திண்டுக்கல் மாவட்டம் , ஆத்தூர் ஒன்றியத்தில் சொட்டு நீர்ப் பாசனம் விழிப்புணர்வு முகாம்..

திண்டுக்கல் மாவட்டம் , ஆத்தூர் ஒன்றியத்தில் சொட்டு நீர்ப் பாசனம் விழிப்புணர்வு முகாம்..

by ஆசிரியர்
திண்டுக்கல் மாவட்டம் , ஆத்தூர் ஒன்றியத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் பாதுகாப்பு த் துறை இணைந்து  நடத்திய சொட்டு நீர்ப் பாசனம் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இம்முகாம்  திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலமையில், ஆத்தூர்  தாசில்தார்  இராஜகோபால் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் விஜயராணி முன்னிலையிலும்   இவ்வழிப்பணர்வு முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில்  நீர்தேவைகள் பயிர்களுக்கு நிறைய தேவைப்படுமென்பதாலும், மழைநீர் குறைவாக உள்ள காரணத்தினாலும் சொட்டுநீர் பாசனத்தை பயன்படுத்த விவசாயிகள் அறிவுறுத்தப்பட்டனர். இம்முகாமில் குறிப்பாக தென்னை , மக்காச்சோளம் மற்றும் பிற பயிர்கள்
பயிரிட  நீர் முக்கிய மாதலால் அதன் நன்மைகள் எடுத்துக் கூறப்பட்டது.
மேலும் இம்முகாமில் குரு நில விவசாயத்திற்கு சொட்டுநீர்பாசனங்கள் வழங்குவதற்காக விவசாயிகளின் ஆவணங்கள் சரிபார்த்தல்,  பட்டாசிட்டா அடங்களில் பிழைத் திருத்தம், மற்ற இதரவைகள் சரிபார்த்தல்  நிகழ்வுகளும் நடைபெற்றது.   இம்முகாமில் ஆத்தூர் வட்ட கிராம அலுவலர்களும், வருவாய் அலுவலர்களும் கலந்து கொண்டு விவசாய பொதுமக்களை பயனடையச் செய்தார்கள்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!