Home செய்திகள் கோட்பிரீட் வில்ஹெல்ம் லைப்னிட்ஸ் – கூகுள் டூடுலில் இன்று..

கோட்பிரீட் வில்ஹெல்ம் லைப்னிட்ஸ் – கூகுள் டூடுலில் இன்று..

by ஆசிரியர்

கோட்பிரீட் வில்ஹெல்ம் லைப்னிட்ஸ் (Gottfried Wilhelm Leibniz) என்பவர் ஜெர்மனியை சேர்ந்த தத்துவவாதியும், பல்கலை வல்லுனரும் ஆவார். இவரின் 372-ஆம் ஆண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு கூகுள் இவராய் தனது சிறப்பு கூகுள் டூடுல் மூலம் சிறப்பித்துள்ளது

இவர் கணித வரலாற்றிலும், தத்துவ வரலாற்றிலும் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளார். டிஜிட்டல் கணினிக்கு அடித்தளமான பைனரி முறைமையை (0 & 1) செம்மைப்படுத்தினார். இதைக்குறிக்கும் விதமாக இன்றைய கூகுள் டூடுல் படம் இருக்கிறது.

கோட்பிரீடு இலைபுனிட்சு அல்லது கோட்பிரீடு வில்கெலம் இலைபுனிட்சு, (Gottfried Wilhelm Leibniz) (1646 – 1716) ஒரு இடாய்ச்சுலாந்திய மெய்யியலாளராவார். இவரின் பெயரை இலீபுநிட்சு என்றும் சொல்வார்கள் மெய்யியலின் வரலாற்றிலும் கணித வரலாற்றிலும் குறிப்பிடத்தக்க இடம் வகிக்கும் இவர் பல்துறை அறிவு கொண்டவர். இவர் பெரும்பாலும், இலத்தீன் மற்றும் பிரெஞ்சு மொழிகளிலேயே எழுதியுள்ளார்.

சட்டம், தத்துவம் ஆகியவற்றைக் கற்ற இலை புனிட்சு, இடாய்ச்சுலாந்து நாட்டுப் பிரபுக்கள் இருவர் குடும்பங்களில் பல விதமான பணிகளையும் செய்யும் ஒருவராக இருந்தார். இக் குடும்பங்களில் ஒன்று இவர் பணி புரியும் காலத்திலேயே இங்கிலாந்தில் அரச குடும்பம் ஆகியது. அக் காலத்தில் இலைபுநிட்சு ஐரோப்பிய அரசியலிலும், அரசத் தந்திரத் துறையிலும், பெரும் பங்கு வகித்தார். அத்துடன், தத்துவவியலின் வரலாற்றிலும், கணித வரலாற்றிலும், இதே போன்ற பெரும் பங்கு இவருக்கு உண்டு. நியூட்டனுக்குப் வேறாக இவரும் நுண்கணிதத்தைக் (Calculus) கண்டு பிடித்தார். இதில் இவரது குறியீடுகளே இன்றுவரை பயன்பாட்டில் உள்ளன.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!