ஐக்கிய அரபு அமீரகத்தில் கவனம்.. அடுத்தவர் விவகாரத்தில் தலையிட்டால் 1 வருட சிறை தண்டனை மற்றும் திர்ஹம் 500,000 வரை அபராதம்…

ஐக்கிய அரபு அமீரகத்தில் வேறு நபருடைய வீடியோவை எடுத்து சமூக வலை தளங்களில் வெளியிட்டவருக்கு 500000 திர்ஹம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தற்சமயம் சமூக வலைதளங்களில் அடுத்தவர்களின் எந்த சம்மதமும் இல்லாமல் புகைப்படம் மற்றும் வீடியோவை பதிவிடுவது அதிகரித்து வருகிறது. இதனால் சமுதாயத்தில் பல பிரச்சினைகளை சந்திக்கவும் பல தவறான கண்ணோட்டங்களுக்கும் வித்திட்டு வருகிறது.

கடந்த வாரம் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரு நபர் போக்குவரத்து துறை வாடிக்கையாளர் அலுவலகத்தில் கண்ணீர் வடிப்பது போன்ற வீடியோ வெளியாகி தவறயான பரபரப்பான கருத்தை பொதுமக்கள் மத்தியில் உருவாக்கியது. இது போன்ற பிரச்சினைகளை கட்டுக்கு கொண்டு வரும் நோக்கத்தில் ஐக்கிய அரபு அமீரகம் சம்பந்தப்பட்டவருக்கு ஒரு வருட சிறை தண்டனையும் திர்ஹம் 500,000 அபராதம் விதித்துள்ளது.

மேலும் இச்சம்பவத்தை தொடர்ந்து இனி வருங்காலங்களில் இதுபோன்ற செயல்களில் உண்மைத் தன்மை அறியாமல் சமூக வலைதளங்களில் வெளியிடுபவர்களுக்கு அமீரக சட்ட விதி 5/2012 படி திர்ஹம் 150,000 முதல் 500,000 அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News Source – Gulf News

புனித ரமலான் வாழ்த்துக்கள்..