“வாழ தகுதியற்ற ஊராக மாறுகிறதா கீழக்கரை??”- மருத்துவர்கள் எச்சரிக்கை.. சமூக ஆர்வலர்களின் முயற்சிகளை அலட்சியப்படுத்தும் நகராட்சி ..

“SMART CITY – KILAKKARAI” கேட்பதற்கு மிகவும் இனிமையாகவும் சந்தோசமாகவும் இருக்கிறது.  ஆனால் எப்பொழுது ஆகப் போகிறது என்பது யாருக்கும் தெரியாத விடை.  ஆனால் மறுபுறம் கீழக்கரையோ தினம், தினம் சுகாதாரத்தில் பின்னோக்கி சென்ற வண்ணமே உள்ளது.

கீழக்கரையில் எங்கு திரும்பினாலும் சாக்கடை, குப்பை மேடுகள், கடற்கரையில் கலக்கும் கழிவு நீர், தெருக்களில் சாக்கடை வாருகால் மூடிகள் உடைந்து ஓடும் சாக்கடை, தேங்கி நிற்கும்  கழிவு நீர், சொறி நாய்கள் மற்றும் பன்றிகளின் நடமாட்டம். ஊரெங்கும் நிறைந்திருக்கும் மருத்துவமனைகளால் சுகாதாரமற்ற முறையில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள் என அடுக்கி கொண்டே போகலாம்.  சமீபத்தில் கீழக்கரையைச் சார்ந்த சமூக சேவகர் ஒருவர் கீழக்கரையில் வீடுகளின் சுத்தத்தை ஆய்வு செய்ய வரும் அரசு அலுவலர்கள் சுகாதாரமானவர்களா?? என்ற கேள்வியை பொதுதளங்களில் எழுப்பியருந்தார். நிச்சயமாக சிந்திக்க வேண்டிய கேள்வி. தீர்வு காண இயலாத அரசு அதிகாரிகளை “இனி வீட்டிற்குள் அனுமதிக்க மாட்டோம்” என்ற ஆதங்கத்தையும் வெளியிட்டிருந்தார்.

கீழக்கரையில் தினமும் பல குழந்தைகள் டெங்கு காய்ச்சலால் பாதிப்புக்குள்ளான வண்ணம் உள்ளனர்.  டெங்கு காய்ச்சல் வந்தாலே பரிசோதனைக்கு இராமநாதபுரம் அல்லது மதுரை செல்லும் நிலைக்கே தள்ளப்படுகிறார்கள்.  மேலும் இந்த காய்ச்சலால் பல நடுத்தர மக்கள் நகைகளை விற்றும், கடன் வாங்கியும் வைத்தியம் பார்க்கும் சூழலுக்கு ஆளாகிறார்கள்.  மேலும் இன்னும் கீழக்கரை மக்கள் மருத்துவ காப்பீடு திட்டம் பற்றிய தவறான புரிதலும், அறியாமையுமே பொருளாதாரத்தை அதிகமாக செலவு செய்ய வேண்டிய சூழல் உள்ளது.
கடந்த வாரம் கீழக்கரை பழைய குத்பா பள்ளி தெருவைச் சார்ந்த பரக்கத் அலி என்பவரின் இரு குழந்தைகளும் ஒரே நேரத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஒரு வாரத்திற்குள் பல ஆயிரங்கள் செலவு செய்துள்ளார்.  இது பற்றி அவர் கூறியதாவது, “என்னுடைய குழந்தைகளுக்கு அடிக்கடி டெங்கு போன்ற காய்ச்சல் வருகிறது. இதற்கான காரணத்தை மருத்துவரிடம் கேட்ட பொழுது, கீழக்கரையில் சுகாதாரம் என்பது கேள்விக்குறியாக உள்ளது .உங்கள் குழந்தைகள் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றால் ஊரை மாற்றுங்கள் என்றார். இது விளையாட்டாக சொல்லப்பட்டாலும், இதுதான் இன்றைய கீழக்கரை நிலவரம் என்பதை பாதிக்கப்பட்டவர்கள் மறுக்க முடியாது, ஆனால் ஊரை விட்டு போக முடியாது, ஆகையால் என் வீட்டை விட்டு சுகாதாரமான இடத்திற்கு மாறலாம் என எண்ணியுள்ளேன்” என வருத்தத்துடன் கூறி முடித்தார்.
 நகராட்சி நிர்வாகம் சுகாதாரம் என்பது ஒரு குறிப்பிட்ட பகுதிக்கும் மட்டுமல்ல, கீழக்கரையில் உள்ள அனைத்து மக்களுக்கும் தேவை என்பதையும் உணர்ந்து செயல்பட வேண்டும். அதே சமயம் நகராட்சியின் அலட்சிய போக்கு முக்கிய காரணமாக இருந்தாலும், தனி மனித ஒழுக்கமும், சமூக பொறுப்பும் மிகவும் அவசியமானதாகும்.  இந்த விழிப்புணர்வு ஏற்படும்பட்சத்தில் அதிக அளவிளான சுகாதார பிரச்சினைகள் தீர்ந்து விடும்.
மேலே உள்ள புகைப்படத்தை சுட்டிக்காட்டி பள்ளி குழந்தைகளுக்கு ஒரு வழி பாதையாவது கிடைக்குமா என ஏக்கத்துடன் கேட்கிறார் பள்ளியின் தாளாளர்.
சிந்திப்போம்!!! செயல்படுவோம்!!
போட்டோ:- மக்கள் டீம், சமூக வலைதளம் ..

4 Comments

  1. பள்ளிச் சிறார்கள் Spider Man போன்று சுவரைப்பற்றி பிடித்து அந்த சாக்கடை வீதியை கடக்கும் காட்சியைப் படம்பிடித்தவருக்கு International Photographer Awardகு பரிந்துரை செய்யலாம்இந்த அவல நிலைமாற ஆவண செய்யுமா அரசு?

  2. Smart City ங்கிற வார்த்தை வருஷம் ஒரு முறை தான் ஒலிக்கும்.அது எப்போனு உங்களுக்கே தெரியும்…அந்த மாசம் மட்டும் பத்து பசங்கள வச்சி (நம்ம கவர்னர் கிளீன் பண்ண வற்றதுக்கு முன்னாடி அவங்களாவே குப்பைய போட்டு அள்ளுறா மாதிரி) ஒரு ஸ்டண்ட் அடிக்கிறதுலாம் எதுக்கு? பல வருஷமா பேசுறாங்க ஏதாவது நடக்குதா?ஒரு முன்னேற்றமும் இல்ல…Smart City லாம் வேணாங்க முதல்ல சுகாதார கேடுகளை அழிக்க வழி பார்க்கட்டும்…

  3. முஹம்மது சரியாக சொன்னீங்க (ஸ்மார்ட் சிட்டி)இந்த வேலைய ஒரு சாதாரண கீழக்கரை வாழ் மனிதர் சொன்னால் பரவாயில்லை, நமது சமூகத்தில் செல்வாக்கு மிக்க ஒரு பெரிய தலையின் வாரிசுதான் இந்த படத்தை ஓட்டிக்கொண்டுருக்கிறார். இவருடன் சில அல்லக்கை இயக்கங்களின் ஒரு சில உறுப்பினர்களும் அவர்களுடைய வாரிசுகளுடன் ஒட்டிக்கொள்வர். .இவருக்கு இந்த விளம்பரம் தேவையா? ” இதிலே ஒரு கொடூரமான காமெடி என்னவென்றால் இந்த திட்டத்திற்கு 100 கோடி எஸ்டீமேட்டாம், 10 வருடங்கள் ஆகுமாம். தமிழக அரசின் தலைமை செயலகத்திடம் அனுமதி வேற பெற்று விட்டார்களாம். இவனுங்க இத அறிவித்தே மூன்று வருடங்கள் ஆகிவிட்டது. இன்னமும் ஒரு துரும்பக்கூட கிள்ளிபோடவில்லை” இன்றைய கால கீழக்கரையான்ஸ் இழித்தவாயர்கள் அல்ல உங்களது கதையை கேட்பதற்கு.

    கீழக்கரையில் ஒன்றிரண்டு சொற்ப அமைப்புகள் கீழ்க்கரை நலனுக்காக உழைத்துக்கொண்டுருக்கின்றனர் அவர்களுக்கு எங்களது வாழ்த்துக்கள் மேலும் அவர்களது பொதுப்பணி சிறக்க.

    • வருசத்துக்கு ஒரு முறை வந்து போகும் வசந்த கால பறவை போல் வந்து போறவங்களுக்கு ஊரின் சுகாதாரம் பத்தி ஏன் கவலை கொள்ளனும்…அவங்களுக்கு லாபம் இருந்தா இறங்கி செய்வாங்க…அவங்க செய்ற முதலீடுக்கு பேரு,புகழ்,பணம் கெடைக்கனும்.இல்லனா ஏன் செய்யனும்???

Comments are closed.