இதம்பாடலில் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான ஆண்டாள் கோவில் கும்பாபிஷேகம்!

இராமநாதபுரம்  மாவட்டம்  ஏர்வாடி  அருகே இதம் பாடல் கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆண்டாள் அம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடந்தது. இதனையொட்டி நேற்று காலை விக்னேஷ்வரர் பூஜையுடன் துவங்கியது இதை தொடர்ந்து முதல.  இரண்டாம் யாக கால பூஜைகள், தீபாராதனை நடந்தது.
இந்நிகழ்வின் ஒரு பகுதியாக நேற்று காலை மூன்றாம் , நான்காம் கால யாக பூஜை, யாக வேள்வி நடந்தது. அபிஷேக பொருட்கள் அடங்கிய பெட்டி, குடங்கள் புறப்பாடாகி கோயிலை வந்தடைந்தது. இதன் பிறகு ஆண்டாள் அம்மனுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. புனித நீர் பக்தர்களுக்கு தெளிக்கப்பட்டது. அம்மனுக்கு தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த விழாவில் இதம்பாடல் ஜமீன்தார்  மங்களநாத துரை, ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் மங்களசாமி, யாதவர் சங்கத் தலைவர் வேல்முருகன், காவல் ஆய்வாளர் சத்யப் பிரியா, கிராம நிர்வாக அலுவலர் சிவபால நாதன், கோயில் பூஜாரி சண்முக வள்ளி,  நிர்வாகி ராதா கிருஷ்ணன், ராமநாதபுரம் மாவட்ட மிளகாய் வியாபாரிகள் சங்க செயலாளர் மங்களசாமி, முனியாண்டி, ஊராட்சி வார்டு முன்னாள் உறுப்பினர் ஆறுமுகம், பா.ஜ., மாவட்ட பிரசார அணி செயலாளர் வெங்கடேஷ் மற்றும் இதம்பாடல் கிராமத்தினர் ஏற்பாடுகளை செய்தனர். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆண்டாள் அம்மனை தரிசனம் செய்தனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..