முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் தாய் சேய் நல ஊர்தி துவக்க விழா..

இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி ராமநாதபுரம் மாவட்ட கிளை சார்பாக முதுகுளத்ததூர் அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்ற தாய்மார்கள் இல்லம் செல்லவும்,  குழந்தையின் தொடர் சிகிச்சைகளுக்காக அழைத்தால் இல்லத்திற்கும் மருத்துவமனைக்கும் செல்வதற்கு வசதியாக  தமிழ்நாடு அரசின் இலவச தாய் சேய் நல ஊர்தி துவக்கி வைக்கப்பட்டது.  இச்சேவை முற்றிலும் இலவசமானது.  முதுகுளத்தூர் ரெட் கிராஸ் ஒருங்கினைப்பாளர் துரைப்பாண்டியன் அனைவரையும் வரவேற்றார்.

ரெட் கிராஸ் மாவட்ட கிளை சேர்மன் ஹாரூன் தலைமையில் முதுகுளத்தூர் சட்ட மன்ற தொகுதிஆலோசனைக்குழு உறுப்பினர்கள் லட்சுமணன்பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் முதுகுளத்தூர் சட்ட மன்ற உறுப்பினர் மலேசியா பாண்டியன், ரெட் கிராஸ் மாநில கிளையினால் இயக்கப்படும் தமிழ்நாடு அரசின் இலவச தாய் சேய் நல ஊர்தியினை கொடியசைத்து துவக்கிவைத்தார்.  இதற்கான மொபைல் தொலைபேசியினை இவ்வண்டியின் வாகன ஓட்டுனர் தாமரைச் செல்வனிடம் வழங்கினார்.  

ரெட் கிராஸ் பொருளாளர் குணசேகரன் இணைச் செயலாளர் ஜீவா ஆகியோர் இலவச தாய் சேய் நல ஊர்தியின் சேவைகளைப் பற்றி விவரித்தனர்.  இந்த வாகனத்தை அழைக்க 102 என்ற கட்டணமில்லா தொலைபேசி என்னை அழைக்க வேண்டும்.  

முதுகுளத்தூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் ரேவதி மற்றும் நிவேதா ஆகியோர் இந்த தாய் சேய் நல ஊர்தியினை பொதுமக்கள் எவ்வாறெல்லாம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதனை விவரித்தனர்.  ஆலோசனைக்குழு பொருளாளர் லெட்சுமணன் நன்றி கூறினார்.

நிகழ்ச்சியில் பொதுமக்கள், ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் செவிலியர்கள் கலந்து கொண்டனர்முதுகுளத்தூர் ரெட் கிராஸ் ஒருங்கினைப்பாளர் துரைப்பாண்டியன் மற்றும் மாவட்ட செயலாளர் எம். ராக்லாண்ட் மதுரம் ஆகியோர் நிகழ்வுக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்  

புனித ரமலான் வாழ்த்துக்கள்..