நரிப்பையூரில் மதநல்லிணக்க கந்தூரி விழா..

நரிப்பையூரில் உள்ள ஐந்து ஏக்கர் கடற்கரை அருகே மகான் காதர் சாகிபு ஒலியுல்லாஹ் தர்கா அமைந்துள்ளது.  அங்கு 11ம் ஆண்டு மதநல்லிணக்க கந்தூரி விழாவை உலக நன்மைக்கான மவுலீது ஓதப்பட்டது.
அதைத் தொடர்ந்து இரவு 7 மணியளவில் தர்கா முன்புறம் விழாக் கமிட்டியாளர்களால் கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது.  இந்த விழாவில் பங்கேற்றவர்களுக்கு நெய்சோறு வழங்கப்பட்டது. மேலும் இரவில் நகைச்சுவை பட்டிமன்றம், கலைநிகழ்ச்சிகள் நடந்தது.
இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நரிப்பையூர் ஐந்து ஏக்கர் மகான் காதர் சாகிபு தர்காவில் கந்தூரி விழாவை முன்னிட்டு கொடியேற்றம் நடந்தது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்கமிட்டியாளர்கள் செய்திருந்தனர்.