Home செய்திகள் மக்கள் சேவை செய்வதற்கு நான் எந்நேரமும் காத்திருக்கிறேன், அமைச்சர் டாக்டர் மணிகண்டன் உருக்கம்……

மக்கள் சேவை செய்வதற்கு நான் எந்நேரமும் காத்திருக்கிறேன், அமைச்சர் டாக்டர் மணிகண்டன் உருக்கம்……

by ஆசிரியர்
இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் பி.மோர்குளம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரு.1.50 லட்சம் மதிப்பில் பெண்கள் குளிக்கும் இடத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள படித்துரையை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் திறந்து வைத்தார்.
அப்பொழுது அவர் மக்களுக்கு வேண்டிய உதவிகளை செய்வதற்கு நான் எந்நேரமும் காத்திருக்கிறேன். அதிலும் கிராம மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தர தயாராக உள்ளேன். இதற்காகவே ஒவ்வொரு கிராமத்திலும் கிளை செயலாளர்கள் முலம் மக்களை சந்தித்து தேவை லிஸ்ட்கள் தயார் செய்து வருகிறேன் என தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் பேசினார்.
மேலும் அவர் மக்கள் மத்தியில் பேசியதாவது,  நான் நேரம் கிடைக்கும் போதெல்லாம் மக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து தேவையான உதவிகள் மற்றும் நலத்திட்டங்களை தொடர்ந்து செய்து வருகிறேன். இந்த மண்ணின் மைந்தன் என்ற முறையில் ராமநாதபுரம் மாவட்ட மக்களின் தேவையை நன்கு அறிந்து அவைகளை உடனடியாக செய்வதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறேன். எனது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலும் பல்வேறு பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. மக்களின் தேவையை புர்த்தி செய்ய தொகுதி நிதி இல்லாவிட்டாலும் வேறு நிதியை பெற்றாவது மக்களின் தேவைகளை உடனடியாக நிறைவேற்றி வருகிறேன். மாவட்டத்தில் 35 கோடி ருபாய் மதிப்பில் சாலைகள் புதுப்பிக்க டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கப்பட உள்ளது. இதன்முலம் நகராட்சி, பேருராட்சிகள், ஒன்றியம், கிராமம் என அனைத்து பகுதியிலும் சாலைகள் போடப்படும். தற்போது சமுதாய கக்ஷடம் அமைப்பதற்கு லிஸ்ட் தயாரிக்கும் பணிநடைபெற்று வருகிறது. மேலும் உப்புநீரை சுத்திகரிக்கப்பட்ட குடிநீராக மாற்றும் திட்டத்தில் மாவட்டத்தில் 50 இடங்களில் ஆர்ஓ பிளாண்ட் மிஷின் அமைக்கப்பட உள்ளது. உங்கள் தேவை எதுவாயினும் நீங்கள் தாராளமாக என்னிடம் தெரிவிக்கலாம். அல்லது உங்கள் பகுதி கிளை செயலாளர் முலம் என்னிடம் தெரிவித்தால் உடனடியாக உங்களது கோரிக்கை நிறைவேற்றப்படும். முதியோர் ஓய்வுதியம் உள்ளிட்ட எந்த தேவையாக இருந்தாலும் தொடர்பு கொள்ளுங்கள். மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய நான் எந்நேரமும் காத்திருக்கிறேன். அதிலும் கிராமமக்களின் தேவை என்றால் முக்கியத்துவும் கொடுத்து அவர்களது தேவையை நிவர்த்தி செய்து வரகிறேன். ஒவ்வொரு கிராமத்திலும் கிளை செயலாளர்கள் முலம் மக்களை சந்தித்து மக்களின் தேவைகள் குறித்து லிஸ்ட் தயார் செய்ய அறிவுறுத்தி உள்ளேன். கட்சி தொண்டர்கள், ஓட்டளித்தவர்கள், ஓட்டளிக்காதவர்கள் என பாரபட்சமின்றி மக்கள் எந்நேரமும் என் வீட்டிற்கு வந்து என்னை சந்திக்கலாம். உங்களுக்கு சேவை செய்வதற்காகவே நான் இருக்கிறேன். உங்கள் ஆதரவை தொடர்ந்து தாருங்கள். இவ்வாறு அமைச்சர் டாக்டர் மணிகண்டன் பேசினார்.
பின்னர் அதைத் தொடர்ந்து 30 ஆண்டுகளாக அரசியல்வாதிகள் வராத திருப்புல்லாணி ஒன்றியம் பி.மோர்குளம் கிராமம் சிறிய கிராமத்திற்கு அமைச்சர் மணிகன்டன் சென்றார்.  அக்கிராமத்திற்கு சென்று நலத்திட்டங்களை தொடங்கி வைத்து மக்கள் மத்தியில் பேசினார். பின் மக்கள்களிடம் தனிதனியாக பேசி நலம் விசாரித்து தேவைகள் எதுவாயினும் தொடர்பு கொள்ள சொன்னார். அமைச்சர் பொறுமையாக பேசுவதை பார்த்த மகளிர் குழுவினர் அமைச்சரை சந்தித்து தங்களது கோரிக்கைகளையும் மனுவாக கொடுத்தனர். அனைவரையும் ஒன்றாக நிற்கவைத்து அவர்களுடன் அமைச்சர் குருப் போட்டோ எடுத்து கொண்டு அனைவருக்கும் நன்றி தெரிவித்து விடைபெற்றார். இந்த உருக்கமான நிகழ்வை கண்டு மைக்செட் அப்ரேட்டர் உடனடியாக நீங்கள் நல்லா இருக்கனும் நாடு முன்னேற…. என்ற பாடலை போட்டு அசரவைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கிளை செயலாளர் வெங்கடேஸ் ஏற்பாடுகளை செய்திருந்து வரவேற்றார். திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் முனியசாமி, ஒன்றிய அவைத்தலைவர் உடையதேவன், அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் சந்திரன், சேதுபதி, தேசிங்கு, தொகுதி செயலாளர் தஞ்சி சுரேஷ்குமார், எம்ஜிஆர் மாவட்ட இணை செயலாளர் சாமிநாதன், மணிகண்டன் உட்பட பலர் உடன் இருந்தனர்.

TS 7 Lungies

You may also like

1 comment

Sadiq MJ June 20, 2018 - 6:43 pm

அது என்ன பி. மோர்குளம் you mean ….ர் மோர்குளம்? அப்படியெனில் முதலில் அந்த ஊருக்கு பெயர் மாற்றம் செய்ய அமைச்சரிடம் கோரிக்கை வையுங்கள். மேலும், நமது இராமநாதபுரம் மாவட்டத்தில் அதுவும் குறிப்பாக நமதூர் கீழக்கரையில் கஞ்சா விற்பனை அமோகமாக நடக்கிறது இதனால் பள்ளி, கல்லூரி மற்றும் இளைஞர்கள் சீரழிந்து சின்னா பின்னமாக நடை பிணமாகத் திரிகிறார்கள். இதனை இரும்புக்காலம் கரம் கொண்டு தடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறைகளுக்கு ஆணையிட வேண்டுங்கள்.
(ஒரு வார்த்தை சட்ட காரணங்களுக்காக மறைக்கப்பட்டுள்ளது)

Comments are closed.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!