கூராங்கோட்டை தர்ம முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் – ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!

இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகேயுள்ள கூராங்கோட்டையில் உள்ள ஸ்ரீ தர்ம முனீஸ்வரர் திருக்கோவிலில் கும்பாபிஷேகம் வெகு விமர்சியாக நடைபெற்றது.
கும்பாபிஷேகம் இராமநாதபுரம் மன்னர் குமரன் சேதுபதி தலைமையில் நடைபெற்றது.  சாயல்குடி ஜமீன்தார் சிவஞானபாண்டியன், கடலாடி வட்டாட்சியர் முத்துலெட்சுமி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிள்ளையார் பட்டி பிச்சை சிவாச்சாரியார் தலைமையிலான வேதவிற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க கடந்த மூன்று நாட்களாக யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.  இதில் கணபதி ஹோமம்,  யாகசாலை பூஜை, பூர்ணாகுதி தீபாராதானை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது.  விழாவின் முக்கிய நிகழ்வான கும்பாபிஷேகம் யாகசாலையிலிருந்து புனிதநீர் குடங்கள் வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க எடுத்துச்செல்லப்பட்டு கோட்டை விநாயகர்,  தர்ம முனீஸ்வரர், வீரமாகாளி, கோட்டை கருப்பணசாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை விழாக்கமிட்டியினர் செய்திருந்தனர்.      கீழக்கரை டி.எஸ்.பி ரவிச்சந்திரன்  ,    சாயல்குடி      போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோக்கின்ஜெரி   ஆகியோர்       தலைமையிலான போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..