‘ரைசிங் காஷ்மீர்’ ஆசிரியர் சுஜாத் புகாரி படுகொலையை கண்டித்து சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் ஆர்ப்பாட்டம்…

கடந்த சில வாரங்களுக்கு முன்பு காஷ்மீரை சார்ந்த ‘ரைசிங் காஷ்மீர்’  நாளிதழின் ஆசிரியர் சுஜாத் புகாரி சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்டார்.  இச்செயலுக்கு இந்தியா மட்டுமின்றி, உலகெங்கும் இருந்து கண்டனம் எழுந்த வண்ணம் உள்ளது.
இந்நிலைநில் சென்னைப் பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம் தெரிவிக்கும் வகையில் சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் முன்பு  இன்று 18/06/2018, சுமார் 03.30 மணியளவில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பத்திரிக்கையாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களின் கண்டனத்தை பதிவு செய்தனர்.