கீழக்கரை தமுமுக சார்பாக ஃபித்ரா பொருட்கள் பல இடங்களில் வினியோகம்…

கீழக்கரையில் தமுமுக நிர்வாகிகள் மற்றும் நகர கிளை உறுப்பினர்கள் சார்பாக பல் வேறு இடங்களில் தேவையுடையோருக்கு பெருநாள் பொருட்கள் வழங்கப்பட்டது.
அதில் ஒரு பகுதியாக இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட முன்னாள்  துணை செயலாளர் முஹம்மது சிராஜ்த்தீன் தலைமையில் சுமார் 150 குடும்பங்களுக்கு பல ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில்  மேலத்தெரு மக்கள் சேவை அறக்கட்டளையின். நிறுவனர்.M.K.E.உமர் அப்துல் காதர் கலந்து கொண்டு பொருட்களை வழங்கினார். மேலும் இந்நிகழ்ச்சியில் கீழக்கரை தமுமுக முன்னாள் நிர்வாகிகள். கீழை.கோஸ் முஹம்மது, அபுரோஸ், சுல்த்தான், சாகுல்ஹமீது. மக்கள் நல பாதுகாப்புக்கழகத்தின் நிர்வாகி முகைதீன் இப்ராஹிம்,  மீனவர் கூட்டுறவு சங்க நிர்வாகி அக்பர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியை தமுமுக மணவரணியை சேர்ந்த கேப்டன்.நவ்பல், செல்வன்.அஜீஸ், சலீம்,  முர்ஸித், உமர்கத்தாப், ஆகியோர் செய்து இருந்தனர்.
அதே  போல் மற்றொரு நிகழ்வில்  கீழக்கரை நகர் சார்பாக 150குடும்பத்துக்கு சிறப்பாக  ஃபித்ரா வழங்கப்பட்டது.  இந்த நிகழ்வை நகர் பொறுப்புக்குழு லக்கி அடுமை,  புகாரி, நசீர், அமீன் மற்றும் 500பிளாட் பாஸீத், ஈசி சாதிக் ஆகியோர் கலந்து கொண்டு ஃபித்ரா பொருட்களை வினியோகித்தனர்.