இராமநாதபுரத்தில் புதிய தலைமுறை மீதான வழக்கை வாபஸ் பெற கோரி பத்திரிக்கையாளர்கள் ஆர்பாட்டம்.

சமீபத்தில் புதிய தலைமுறை தொலைக்காட்சி நடத்தும் வட்ட மேசை நிகழ்ச்சியில் பல் வேறு அரசியல் கட்சியினர் மற்றும் சமூக பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்கும் இயக்குனர் அமீரும் கலந்து கொண்டார்.  நிகழ்ச்சிக்கு இடையில் ஏற்பட்ட குழப்பத்தால் நிகழ்ச்சி பாதியில் நிறுத்தப்பட்டது.  பின்னர் நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தின் உரிமையாளரிடம் புகாரை பெற்று காவல்துறையினர் ஊடகதுறையின் சுதந்திரத்தை நெறிக்கும் விதமாக புதிய தலைமுறை மற்றும் இயக்குனர் அமீர் மீது  வழக்கு பதிவு செய்தனர்.
 
காவல்துறையின் இச்செயலை கண்டித்து பல் வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகள், பத்திரிக்கையாளர் சங்கங்கள் என அனைத்து தரப்பினரும் இச்செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் புதிய தலைமுறை மீதான வழக்கை திரும்ப பெறக்கோரி ராமநாதபுரம் செய்தியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
 
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தனபாலன் தலைமை வகித்தார். கோரிக்கையை வலியுறுத்தி செயலாளர் ஜோதி தாசன், தினகரன், ரமேஷ் ஆகியோர் பேசினர். பொருளாளர் மகேஸ்வரன், இணை செயலாளர் ரகு/ துணை செயலாளர் இளங்கோவன்,  செயற்குழு உறுப்பினர்கள்  சோமசுந்தரம், ஆரிப் ராஜா, பரமேஸ்வரன், ராமு உள்பட மாவட்டத்திலிருந்து பல்வேறு செய்தியாளர்கள் திரளாக பங்கேற்று தங்கள் எதிர்ப்புகளை கோஷங்களாக எழுப்பினர்.