இலங்கை கடற்படை இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைவது இல்லை கடல்பிராந்திய தலைமை அதிகாரி மறுப்பு.

இலங்கை கடற்படை  இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைவது இல்லை என்று தமிழக மற்றும் பாண்டிசேரி கடல்பிராந்திய தலைமை அதிகாரி மறுப்பு தெரிவித்துள்ளார். இன்று 12/06/2018) உச்சிபுளியில் உள்ள இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ் பருந்து  விமானபடை தளத்தில் மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் கடலோர பாதுகாப்பு குறித்து பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் மட்டத்தில்லான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி கடல்பிராந்திய தலைமை அதிகாரி அலோக் பட்நாயக் கடலோர பாதுகாப்பு மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுத்தல் குறித்த  ஆலோசனைகள் இந்திய கடலோர காவல் படை மற்றும் கடற்படை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக கடற்பிராந்திய அதிகாரி அலோக் பட் நாயக், மீனவர்கள் நமது நாட்டின் பொருளாதர வளர்ச்சிக்கு முக்கியமானவர்கள். இலங்கை கடற்படையினர் இந்திய எல்லைக்குள் அத்துமீறி எல்லை தாண்டுவது கிடையாது என  இந்திய கடற்படை முற்றிலும் மறுப்பதாக கூறினார், மேலும் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்க ஆறு  மாதத்திற்கு  ஒரு முறை சர்வதேச கடல் எல்லையில் இந்திய இலங்கை  கடற்படையினர் கூட்டாக பாதுகாப்பு  ஆலோசனை கூட்டங்கள்  நடத்தப்பட்டு வருகிறது. இதனால் நடுக்கடலில் ஏற்படும் சட்டவிரோத நடவடிக்கைகள்,கடத்தல் சம்பவங்கள் மற்றும் இலங்கை அகதிகள் ஆவணங்கள் இன்றி இலங்கை செல்வது முற்றிலும் தடுக்கப்பட்டு வருகிறது.இந்திய மீனவர்கள் ஜி.பி.எஸ் கருவியை பயன்படுத்தி எல்லை தாண்டாமல் மீன்பிடிக்க வேண்டும் என கூறினார். கடற்படை மற்றும் கடலோர காவல்படை சார்பாக மீனவர்களிடம் எல்லை தாண்டாமல் இருப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.நவீன விமான இறங்கு தளம் அமைக்க  உச்சிப்புளி கடற்படை விமான தளத்தை விரிவாக்கம் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, விமான தளம் விரிவாக்கம் செய்யப்பட்ட பின்பு பெரிய ரக விமானங்கள்  வந்து செல்ல முடியும்.  இதற்கான இடத்தை வழங்குவது மாநில அரசு கையில் தான் உள்ளது,இந்திய கடல்வழியாக நடைபெறும்  கடத்தல் சம்பவங்கள் தடுக்க 24மணிநேரமும்  ரோந்து பணி நடைபெறும் என தெரிவித்தார். பாதுகாப்பு ஆலோசனை கருத்தரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் நடராஜன், டி.ஐ.ஜி காமினி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா, ஐ என் எஸ் பருந்து விமான தள கமாண்டர் குல்தீப் தங்சாலே, மற்றும் இந்திய கடற்படை,மண்டபம் கடலோர காவல் படை,கடலோர காவல்படை குழுமம், மாவட்ட கண்காணிப்பாளர், உளவுத்துறை மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..