இராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் பயானிகளை தேர்வு செய்யும் ஆய்வுக் கூட்டம்..

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இனறு (12.06.2018) வருவாய்த்துறையின் சார்பாக சமூக பாதுகாப்பு திட்டத்தின்  கீழ் ஆட்சியர்  நடராஜன் தலைமையில் 18 வயதிற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித் தொகை வழங்கிட தகுதியான பயனாளிகளை தேர்வு செய்வதற்கான ஆய்வுக் குழு கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகளின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு அவர்கள் பாதுகாப்பினை உறுதி செய்திடும் விதமாகவும், சுயமாக செயல்பட்டு சமுதாயத்தில் சிறந்த நபர்களாக தன்னம்பிக்கையுடன் வாழ வழி வகை செய்திடும் விதமாக  எண்ணற்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் வாயிலாக மாதாந்திர உதவித்தொகை வழங்குதல், இணைப்பு சக்கரம்,  பொருத்தபப்ட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்குதல்,  இலவச பேருந்து பயண அட்டை வழங்குதல், கல்வி உதவித் தொகை மற்றும் தொழில் துவங்க அரசு மானியத்துடன் கூடிய கடன் உதவி போன்றவை செய்யப்பட்டு வருகின்றன. அதேபோல வருவாய்த்துறையின் மூலம் சமூகபாதுகாப்பு  திட்டத்தின்கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவி தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வருவாய்த்துறையின் மூலம் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் உள்ள 18 வயதிற்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்குவதற்கு தகுதியான பயனாளிகளை தேர்வு செய்வதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ச.நடராஜன் தலைமையில் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெற்றது.  இந்த ஆய்வுக் குழு கூட்டத்தில் மாவட்டத்தின் பல் வேறு பகுதிகளிலிருந்து மொத்தம் 67பயனாளிகள் வருகை தந்தனர். இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பயனாளிகளின் வயது,  சம்பந்தப்பட்ட நபரது மாற்றுத்திறனின் தன்மை ஆகியவை குறித்து ஆய்வுசெய்யபப்ட்டது. இக்குழுவின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் பயானாளிகளுக்கு மாதந்தோறும் உதிவிதொகையாக  ரூ.1000/- வழங்கப்படவுள்ளது.
இந்த ஆய்வுக் குழு கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரி, பரமக்குடி சார் ஆட்சியர் விஷ்ணுசந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். அதேபோல சமூக பாதுகாப்பு திட்டத்தின் தனித் துணை ஆட்சியர் ஆ.காளிமுத்து, மாவட்ட மாற்று திறனாளிகள் நல அலுவலர் சி.தங்கவேலு, மாவட்ட சமூக தல அலுவலர் குணசேகரி, மாஙட்ட மருத்துவ அலுவலர் சி.மகேஸ்வரி  ஆகியோர் உறுப்பினர்களாக பங்குபெற்று தகுதியான பயனாளிகளைத் தேர்வு செய்தனர்.