Home செய்திகள் சஹர் உணவு மூலம் மனிதநேயத்தை வெளிப்படுத்திய கீழக்கரை அஹமது தெரு சகோதரர்கள்..

சஹர் உணவு மூலம் மனிதநேயத்தை வெளிப்படுத்திய கீழக்கரை அஹமது தெரு சகோதரர்கள்..

by ஆசிரியர்

புனித ரமலான் மாதத்தில் இறைவனின் அருளை கொள்ளையடிப்பதில் ஒவ்வொருவரும் நற்காரியங்களும் உதவிகளும் போட்டி போட்டு செய்த வண்ணம் இருக்கிறார்கள். உலகில் பல இடங்களில் அன்றாட உணவு விருந்து என்ற பெயரில் ஆடம்பர விடுதிகளில் தங்கள் பெயரும், தான் சார்ந்து இருக்கும் இடத்திற்கும் விளம்பரம் செய்யும் நோக்கில் வீண் விரயம் ஆகிறது. அதே போல் இன்னும் பல இடங்களிலோ நல்ல மனம் இருந்தும் உண்ண உணவில்லாமல் வாடும் கொடும் நிலையும் நிலவுகிறது.

இந்த புனித ரமலான் மாதத்தில் தான் மட்டும் நல்ல உணவு உண்டால் போதாது, தேவையுடையவரையும் கண்டறிந்து அவர்களுக்கும் நல்ல உணவை வழங்க வேண்டும் என்ற நோக்கில் கீழக்கரை அஹமது தெருவைச் சார்ந்த இளைஞர்கள் கீழக்கரை அருகே உள்ள இஸ்லாமிய குடும்பங்களை உள்ளடக்கிய ராசகுளம் கிராமத்திற்கு சென்று ரமலான் மாதத்தின் வலியுறுத்தப்பட்ட உணவான சஹர் உணவை அங்குள்ள மக்களுக்கு தயார் செய்து பறிமாறினர்.

இந்த நிகழ்ச்சியில் கீழக்கரை அஹமது தெரு சகோதரர்களே நேரடியாக சென்ற அவ்வூர் மக்களுக்கு உணவுகளை பறிமாறினர். ஆடம்பர உணவகங்களில் சுய விளம்பரத்திற்காக இஃப்தார் விருந்தும், சஹர் உணவும் எளியவர்களை தவிர்த்து பரிமாறும் வேலையில் அஹமது தெரு சகோதரர்களின் செயல் பாராட்டுக்குரியது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!