இரவு நேர விபத்துக்களை தடுக்க வாகன ஓட்டுநர்களுக்கு தேநீர் தந்து களைப்பைப் போக்கும் காவல்துறை…

இராமநாதபுரம்-மதுரை இடையிலான தேசிய நெடுஞ்சாலை பகுதியில் நள்ளிரவு நேரங்களில் ஓய்வின்றி வாகனங்களை இயக்கி வரும் ஓட்டுநர்கள் தூக்க கலக்கத்துடன் வாகனங்களை இயக்குவதால் வாகன விபத்துக்கள் ஏற்பட்டு, உயிர் சேதங்கள் ஏற்பட்டு வருகிறது. இத்தகைய விபத்துகளை தடுக்கும் வகையில் இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா, இரவு நேர வாகன ஓட்டிகளுக்கு தேநீர் வழங்கி ஓய்வு அளித்து ஓட்டுநர்களின் களைப்பு நீங்கிய பின்னர் வாகனங்களை இயக்க ஏற்பாடு செய்துள்ளார்.

இதன்படி, திருவாடானை துணைக் கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில் கிழக்குக் கடற்கரைச் சாலை, தொண்டி, திருப்பாலைக்குடி, இராமநாதபுரம் ஆகிய ஊர்களில் நிறுத்தி, அந்த வாகன ஓட்டுநர்களுக்கு இலவசமாக சுடச் சுட தேநீர் வழங்கி ஓட்டுநர்களின் களைப்பினை போக்கி அனுப்பும் பணியில் திருவாடானை, திருப்பாலைக்குடி, திருவாடானை காவல் ஆய்வாளர்கள் போலீசாருடன் இணைந்து இந்த சேவை பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இத்தகைய விபத்துக்களையும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் தடுக்கும் வகையில் இராமநாதபுரம் மாவட்ட போலீசார் இரவு நேர தேநீர் உபசரிப்பு, ஓட்டுநர்கள் மத்தியில் மட்டும் இன்றி, பொதுமக்கள் மத்தியிலும் போலீசாருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்துள்ளது.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..