Home செய்திகள்கீழக்கரை செய்திகள் இன்று (08-06-2018) உலக பெருங்கடல் தினம்….

உலக பெருங்கடல் நாள் எனும் இந்நாளை ஒவ்வொரு வருடமும் ஜூன் 8ம் தேதி உலக நாடுகள் முலம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த மாபெரும் தினத்தை 1992ம் ஆண்டு பிரேசிலின் இரியோ டி செனிரோ நகரில் இடம்பெற்ற பூமி உச்சி மாநாட்டில் முதன்முறையாக கனடா இத்தினத்திற்கான கோரிக்கையினை முன்வைத்ததை அடுத்து உலகெங்கும் அதிகாரபூர்வமற்ற வகையில் உலக கடல் தினம் கொண்டாடப்பட்டது. பின்னர் ஐக்கிய நாடுகள் 2008ம் ஆண்டு எங்களின் சமுத்திரங்களும் எங்களின் பொறுப்புகளும் “Our Ocean, Our resoonsibiliy” எனும் கருப்பொருளை அடிப்படையாக கொண்டு இத்தினத்தை அதிகாரபூர்வமாக அங்கிகரித்து அறிக்கையினை வெளியிட்டது. இதனது அடிப்படையில் உலக நாடுகள் அனைத்தும் இத்தினத்தை சிறப்பாக கொண்டாடி வருகின்றது.உலகபெருங்கடல் தினம் கொண்டாடாடுவதில் தமிழர்கள் முக்கியமானவர்கள்  என்று ஆராய்சியாளர்கள் கூறுகின்றனர்உலகம் முழுவதும் சுமார் 10 கோடி பேர் உணவு மற்றும் வருவாய்க்கு கடலை நம்பி உள்ளனர்.

 வாழ்வாதாரத்தில் கடலின் பங்கு
பூமியில் நாம் வாழ்வதற்கு கடல் பெரும் பங்கு வகிக்கிறது. மேலும் கண்டங்களை ஒன்றிணைத்து வாணிபம் செய்யவும் பலநாடுகளின் போக்குவரத்து கடல்மார்க்கமாகவே கையாளப்படுகிறது. கடல் ஒவ்வொரு ஆண்டும் பல மில்லியன் மக்களின் உணவுத் தேவையினை பூர்த்தி செய்வதோடு ஆக்சிஜன் என்னும் உயிர்வாயுவை உற்பத்தி செய்தும் முக்கியமான மருந்துகளின் முலப்பொருட்களையும் வழங்குகிறது. மேலும் காலநிலை மாற்றங்களை, சீரமைக்க பேருதவியாக உள்ள இப்பெருங்கடல்கள் சில சமுகத்தினரின் வாழ்வாதாரங்களாக அமைந்துள்ளது. 52 சதவீத மீனவர்களுக்கு கடலில் தான் வாழ்க்கையே உள்ளது.  நாம் சுவாசிக்கும் ஆக்சிஜனில் 70 முதல் 80 சதவீதம்கடல் மூலமாக தான்  கிடைக்கிறது.
 
இப்படி நமக்குத் தேவையானதை அளிக்கும் கடலில்  ஒவ்வொரு ஆண்டும் கழிவு நீர்எண்ணெய் கசிவுகளோடுசுமார் 8.8 மில்லியன் மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவுகள் கலப்பதாகவும் இது அடுத்த 2025 ஆண்டுக்குள் கடலில்பிளாஸ்டிக் துகள்களின் எண்ணிக்கை சுமார் 170 மில்லியன் டன்னாக  இருக்கும் என்று கடல்சார் ஆய்வாளர்கள்கூறுகின்றனர்கடல் மாசு காரணமாக ஆசிய மற்றும் அமெரிக்க நாடுகளில் சுவாசம் தொடர்பான நோய்கள்உலகசுகாதார மையம் எச்சரிக்கை விடும் அளவிற்கு அதிகமாக  பரவத் துவங்கியதால் கடல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுஉலக நாடுகளுக்கு ஏற்படத் துவங்கியுள்ளது.
 
 
வாழ்க்கையோடு பிரிக்க முடியாத இடம் என்றால் அது  கடற்கரை தான். குடும்பத்தினருடன் குதுகலிக்க  இதை விட சிறந்த இடம் வேறெதுவும்  இருக்கவே முடியாது. நம் உணர்வுகளோடு கலந்த இந்த கடற்கரையை  காக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உண்டு என்பதை நினைவூட்டவே இந்த உலக கடல் தினம். ​இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கருப்பொருளின் அடிப்படையில் உலக பெருங்கடல் தினம் அல்லது உலக சமுத்திர தினம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
2008ஆம் ஆண்டு முதல் கொண்டாடபட்ட உலக கடல் தினத்தின் கருப்பொருட்கள் கீழே உங்கள் பார்வைக்கு:
2008ம் ஆண்டு – எங்களின் சமுத்திரங்களும் எங்களின் பொறுப்புகளும்
“Our ocean Our responsibility”
2009ம் ஆண்டு – எங்கள் கடல்கள் நமது கடமை
“OurOfean Our responsbility”’
2010ம் ஆண்டு – எங்கள் சமுத்திரங்களும் வாய்ப்புகளும் சவால்களும்
 “Our Oceans Oppotunities & Challenges”
2011 & 12ம்; ஆண்டு – இளைஞர் அடுத்த அலைமாற்றம்
“Youth, the next wave for change”
2013 & 14ம்; ஆண்டு – நாம் யாவர்க்கும் கடல்களை பாதுகாக்கும் ஆற்றல்  உண்டு
“ Together we have the power to protect the nation”
2015 & 16ம்; ஆண்டு -ஆரோக்கியமான பெருங்கடல்கள், ஆரோக்கியமான கிரகம்
 “Healthy Ocean, Healthy Planet”
2017ம் ஆண்டு –   எங்கள் சமுத்திரமும் எங்களது எதிர்காலமும்
“Our ocean, Our future”
2018ம்; ஆண்டு -பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்தல் மற்றும் ஆரோக்கியமான பெருங்கடலுக்கான தீர்வுகளை ஊக்குவித்தல்.
“Preventing plastic pollution and encouraging solutions for a healthy ocean”

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!