கீழக்கரை நகராட்சி நிர்வாகமும் சுகாதாரத்துறையும் விழித்துக் கொள்ள வேண்டிய தருணம்..

கீழக்கரை நகர் ரமலான் முழுவதும் பரபரப்பாக இருக்கும் மாதம்.  அதில் மிகவும் முக்கியமாக உணவகங்கள், அதிலும் மாலை நேரத்தில் நோன்பு திறப்பதற்காக விற்கப்படும் உணவு வகைகளான போண்டா, பஜ்ஜி, பஃப் போன்ற வகைகள் அமோகமாக விற்கப்படும்.
ஆனால் இந்த உணவு வகைகள் அனைத்தும் சுகாதார முறைப்படி விற்கப்படுகிறதா என்பது பெரிய கேள்வி குறியாகும்.  ஏற்கனவே கலப்பட பொருட்கள் மிகுந்து கிடக்கும் இந்த உணவு சந்தையில் ஆரோக்கியிமில்லாமல் சமைக்கப்படும் உணவுகளால் பொதுமக்கள் பல் வேறான நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதே உண்மை.
நேற்று (25/05/2018) கீழக்கரை நகரில் உள்ள சர்வதேச உணவை பெயராக கொண்டு இயங்கி வரும் பேக்கரியில் வாங்கப்பட்ட கோழி ரோலில் (Chicken Roll)  கழிவாக கருதப்படும் கோழியின் குடலை, அதில் உள்ள கழிவுகளை கூட நீக்காமல் வைத்து தயார் செய்துள்ளார்கள்.  அதை வாங்கிய வாடிக்கையாளர் ருசியில் மாற்றமும், வாடையும் வருவதை கண்டு, முழுமையாக பார்த்த பொழுது கழிவு பொருட்களும் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இந்த விசயத்தில் புனித மாதத்தை கருத்தில் கொண்டு வியாபாரிகள் மக்களை ஏமாற்ற எத்தனிக்கிறார்கள்.  இத்தருணத்தில் கீழக்கரை நகராட்சியின் சுகாதாரத்துறை அலுவலகம், நகரில் இயங்கும் உணவகங்களை ஆய்வு செய்து, முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொது மக்களின் எதிர்பார்பாக உள்ளது.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..