பூங்கா அமைக்க எதிர்ப்பு வட்டச்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்பாட்டம்…

இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே பாரம்பரியமாக மீன்பிடி தொழில் செய்து வாழ்ந்து வரும் சங்குமால் கடற்கரைப் பகுதியில் மீனவர்களை அப்புறபப்டுத்தும் நோக்கில் கடற்கரை பூங்கா அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதாக கூறி இன்று சங்குமால், ஓலைக்குடா, தண்ணீர்ஊற்று, மெய்யம்புளி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பப்ட்ட கிராமங்களைச்சேர்ந்த மீனவர்கள் மீன்பிடி தொழிலாளர்கள்  கூட்டமைப்பு சார்பில் ராமேஸ்வரம் பேருந்துநிலையம் எதிரே   மீன்பிடி உபகரணங்களை தலையில் சுமந்து ஆர்பாட்டம் நடத்தினார்கள் பின்னர் பேரணியாகச் சென்று வட்டாச்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.
பின் வட்டாச்சியர் சந்திரன் மீனவர்களுடன் பேச்சுவார்தை நடத்தினார்,  இதில் மாவட்ட ஆட்சியர் சம்பவ இடத்திற்கு வந்து மீனவர்களின் கருத்துக்களை கேட்டறிந்து மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு திட்டங்களை செயல்படுத்துவதாக உறுதியளித்தார்.  மேலும்  ஆட்சியர் கருத்துக்கேட்புக்குப்பின் தான் சங்குமால் கடற்கரைப் பகுதியில் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று உத்திரவாதம் அளித்தார். அதன் பின்னர் மீனவர்கள் கலைந்து சென்றார்கள்.
இது குறித்து மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு மாவட்ட செயலாளர்  கருணாமூர்த்தி கூறியதாவது, பாரம்பரியமாக நாங்கள் பயன்படுத்திவந்த கடற்கரைப் பகுதியில் பூங்கா அமைக்கும் திட்டதை மாவட்ட நிர்வாகம் கைவிட வேண்டும்  பல நூறு மீனவக்குடும்பங்களின்  வாழ்வாதரத்தை அழித்து  கேளிக்கை பூங்கா அமைக்க திட்டமிட்டுள்ளது எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ளமுடியாது. மேலும் ராமேஸ்வரத்தில் வளர்ச்சி திட்டங்கள் என்ற பெயரில்  மாவட்ட நிர்வாகம் நிதிகளை வீணடித்து வருவதாகவும் ஏற்கனவே பல கோடிகளில் செயல்படுத்தப்பட்ட  திட்டங்கள் அணைத்தும் வீணடிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்திய மீனவகூட்டமைப்பினர்  இத்திட்டத்தை முழுமையாக கைவிடும் வரை எங்களது போராட்டங்கள் தொடரும்” என்றார்.