Home செய்திகள் கீழக்கரை காவல் நிலையத்தில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

கீழக்கரை காவல் நிலையத்தில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

by ஆசிரியர்

கீழக்கரை காவல் நிலையத்தில் விழிப்புணர்வு கூட்டம் காவல் சார்பு ஆய்வாளர் செந்தில் முருகன்  தலைமையில் இன்று (16/05/2018) நடைபெற்றது.  பொதுவாக ரமலான் மாதத்தில் சிறுவர்களும், இளைஞர்களும் இரவு பின்னேரங்களில் இரண்டு சக்கர வாகனங்களில் வேகமாக சென்று விபத்துக்குள்ளாவது, கடந்த வருடங்களில் அதிகரித்த வண்ணம் உள்ளது.  இதை கட்டுக்குள் கொண்டு வரும் விதமாக காவல் துறை சார்பாக கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த கலந்துரையாடல் கூட்டத்திற்கு கிழக்குத் தெரு ஜமாத்தை சார்ந்த அஜிஹர் தலைமை தாங்கினார்.  இக்கூட்டத்தில் சமூக ஆர்வலர்கள், ஜமாத்தார்கள், செஞ்சிலுவை சங்கம் அப்பா மெடிகல் சுந்தரம், விடுதலை சிறுத்தை கட்சி, திமுக, மக்கள் டீம், பாப்புலர் ஃப்ரண்ட், SDPI கட்சி, மக்கள் நல பாதுகாப்பு கழகம் மற்றும், நிஷா பவுன்டேசன், சட்ட விழிப்புணர்வு இயக்கம், தவ்ஹீத் ஜமாத், இந்தியன் தவ்ஹீத் ஜமாத் போன்ற அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில பிரச்சினையை விளக்கி பேசிய சார்பு ஆய்வாளர், “விதிகளை மீறி இரு சக்கர வாகனத்தில் செல்லும் கீழக்கரை வாழ் இளைஞர்கள்   வரும் நோன்பு நாட்களில்  விதிகளை மதித்து செல்ல வேண்டும் என்றும், முன் விரோதம் காரணமாக வரும் வீண் விவாதங்களை தவிர்க்க வேண்டும் என்றும், ஒரு மாதகாலத்திற்கு இரவில்  டூவீலர்களை பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு பைக் சாவி கொடுக்க வேண்டாம் என்றும், இதுகுறித்து எவ்வித FIR பதிவுகளும் வராமல் இருக்க சமூக ஆர்வலர்கள், ஜமாத்தார்கள், இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அதைத் தொடர்ந்து பேசிய வடக்குத் தெரு ஜமாத் தலைவர் ரத்தின முகம்மது  கூறியதாவது, “இது குறித்து வரும் தராவீஹ் பெண்கள் தொழுகைப் பள்ளியில் நோட்டீஸ் தந்து விழிப்புணர்வு தர வேண்டும்” என்றார்.  பின்னர் குத்பா பள்ளி ஜமாத்தை சார்ந்த  மரைக்கா கூறுகையில்,”இரவு நேரங்களில் பந்து விளையாட்டில் ஈடுபடும் இளைஞர்களால் சண்டை சச்சரவு வருவதை தடுக்க ரோந்து வர வேண்டும் என்றார்.  பின்னார் திமுகவைச் சார்ந்த  SKV சுஹைபு,” இரவு போலீசார் ரோந்து வர வேண்டும், முக்கு ரோட்டை தாண்டியதும் விதிமுறை மீறியதாக கருதினால் பைன் போட வேண்டும் என்றார்.  அவரைத் தொடர்ந்து தவ்ஹீத் ஜமாத் தினாஜி கான் கூறுகையில்,” தண்டனைகள் கடுமையாக இருந்தால் குற்றங்கள் குறையும் ஆகவே விதிமீறுபவர்களுக்கு அபராதம் மற்றும் பெற்றோர்களை எச்சரித்து அனுப்ப வேண்டும் என்றார்.  பாப்புலர் ஃப்ரண்ட் முபீஸ்,”விபத்துக்கள் குறித்து நகரின் முக்கிய இடங்களில் ப்ளக்ஸ் போர்டு வைக்க வேண்டும்” என்றார்.  அதைத் தொடர்ந்து பேசிய நிஷா பவுண்டேசன் நடிகர் சித்திக்,” நாம் கூட்டம் போட்டு விவாதங்கள் நடத்துவதால் எவ்வித பிரயோஜனம் இல்லை. கூட்டத்திற்கு  இளைஞர்களை அழைத்து இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்” என்றார்.

அதே போல் அங்கு வருகை தந்திருந்த பல சமூக ஆர்வலர்கள் இரவு நேரங்களில் ஏற்படும் விபத்துக்களை தடுக்க பல கருத்துக்களை காவல்துறை ஆய்வாளருடன் பகிர்ந்து கொண்டனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!