விபத்தில் காயம் அடைந்தவர்களை மாவட்ட ஆட்சியர் நேரில் சந்தித்து ஆறுதல்…

இராமநாதபுரம் மாவட்டம் எட்டிவயல் அருகே இன்று (16.05.2018) ஏறப்ட்ட சாலை விபத்தில் காயமடைந்து இராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் நடராஜன்  நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி  அருகேயுள்ள மாயக்குளம் பகுதியைச் சார்ந்த16 நபர்கள் டூரிஸ்டர் வேன் வாகனத்தின் மூலம் பழனிககு சென்று இராமநாதபுரம் திரும்பியுள்ளனர். இராமநாதபுரம் அருகேயுள்ள எட்டிவயல் கிராம பகுதியில் இன்று அதிகாலையில் வாகனம் வந்து கொணடிருந்த போது எதிர்பாராத விதமாக விபத்து ஏறப்ட்டது. இவ்விபத்தில் வாகனத்தில் பயணம் செய்த ஒருவருக்கு பலத்தகாயமும் 8 நபர்களுக்கு லேசான காயங்களும் ஏறப்ட்டது. அவர்கள் அனைவரும் இராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு முதலுதவி மற்றும் மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் நடராஜன்  இராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு நேரடியாகச் சென்று விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நபர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ஏற்பட்டுள்ள காயம் குறித்த விபரங்களையும்,  அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறிதத் விபரங்களையும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

இந்நிகழ்வின் போது அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் உடன் இருந்தார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.