கீழக்கரை வடக்குத் தெரு அல் மதரஸதுல் முஹம்மதியா மதரஸாவின் கோடைகால நிறைவு விழா…

கீழக்கரை வடக்குத் தெரு “நாசா” அறக்கட்டளை மூலம் வட்டியில்லா கடன் திட்டம், ஆம்புலன்ஸ் சேவை மற்றும் மருத்துவ உதவி என பல மக்கள் தல சேவைகள் செய்யப்பட்டு வருகிறது.  அதே போல் இளைய சமுதாயம் மார்க்க கல்வியிலும் சிறந்து வழங்க வேண்டும் என்ற நோக்கில் அல் மதரஸதுல் முஹம்மதியா என்ற மதரஸாவும் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த மதரஸா மூலம் ஒவ்வொரு கோடை காலத்திலும் மாணவர்கள் பயனுள்ள வகையில் கோடை விடுமுறையை கழிக்கும் வண்ணம் கோடை கால சிறப்பு வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வரிசையில் இந்த வருடம்  மதரஸாவின் கோடைகால நிறைவு விழா மற்றும் மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா நிகழ்ச்சி இன்று (15-05-2018) மதரஸா வளாகத்தில் நடைபெற்றது.  இவ்விழாவில் பங்குபெற்ற மாணவர்கள் மற்றும் சிறந்த மாணவர்களுக்கான சிறப்பு பரிசுகளும் வழங்கபட்டது.

மாணவர்களுக்கான பரிசுகளை நாசா அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் வடக்குத் தெரு ஜமாத்தை சார்ந்த பெரியோர்கள்  வழங்கினார்கள்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.