சுற்றுலா வேனும், லாரியும் மோதிக்கொண்டதில் 4 பேர் பலி. 14 பேர் படுகாயம்…

இராமநாதபுரம் மாவட்டம் உப்பூர்  அனல் மின் நிலையம் அருகே கன்னியாகுமரியிலிருந்து வேளாங்கன்னிக்கு சென்ற வேன் மீது  கிழக்கு கடற்கரைச்சாலையில் இராமநாதபுரம் நோக்கி வந்த மணல் லாரி  மோதியதில்  சம்பவ இடத்திலேயே நான்கு பேர் பலி ஆகினர்.

மேலும் 14 பேர் படுகாயத்துடன் இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் வேனில்  வந்த புனிதா(32) புஸ்பராஜ்(36), ரிபான்(9), ஜான்(38) பலியாயினர். ரிச்சர்டு, லிசி, ரிஸ்வான், ஹெலன் ஜெனிபர் மற்றும்  நான்கு சிறுவர்கள், உட்பட 14 பேர்  படுகாயத்துடன் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் திவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து திருப்பாலைக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை  மேற்கொண்டு வருகின்றனர்.

சத்தியபாதை மாத இதழ் ..

சத்தியபாதை மாத இதழ் ..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..