இராமேஸ்வரத்தில் சட்டத்துறை அமைச்சரைக் கண்டித்து மருத்துவ சமுதாய மக்கள் உண்ணாவிரதம்..

இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் மருத்துவர் சமுதாயத்தையும், முடிதிருத்தும் தொழிலார்களையும் இழிவு படுத்தி பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகத்தை கண்டித்து மருத்துவ சமுதாயத்தை சேர்ந்தவர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையென்றால் தங்களின் முடிகளை வெட்டி அவருக்கு அனுப்புவோம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் 30ம் தேதி கடலூரில் அதிமுகவின் பொதுக்கூட்டம் நடைபெற்றது  இந்த  பொதுக்கூட்டத்தில் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் மருத்துவர் சமுதாயத்தையும், முடிதிருத்தும் தொழிலார்களையும் இழிவு படுத்தி பேசியதாக கூறப்படுகின்றது.

இதனை கண்டித்து இழிவாக பேசிய சட்டத்துறை அமைச்சர் மன்னிப்பு கேட்டு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மருத்துவ சமுதாயத்தை சேர்ந்தவர்கள்  தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதனை தொடர்ந்து இன்று இராமேஸ்வரத்தில் முடி திருத்தும் தொழிலாளர்கள் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தினர். மேலும் அடுத்த கட்ட நடவடிக்கையாக இராமேஸ்வரம் பேருந்துநிலையம் முன்பு தவறாக பேசிய சட்டத்துறை அமைச்சர் சீ.வி.சண்முகத்தை கண்டித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..