மருத்துவமனை உள்ளே மருந்து கடை. நிர்பந்திக்கப்படும் நோயாளிகள்: மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்….

மருத்துவ மனைகளுக்குள்ளேயே மருந்துக்கடை வைத்துக் கொண்டு நோயாளிகளை அங்கேயே மருந்து வாங்கியாக வேண்டும் என்று வற்புறுத்தப்படும் ஒரு நடைமுறை பற்றி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு செய்யப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்தே, நாகேஸ்வர ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு இது குறித்து மத்திய, மாநில, யூனியன் பிரதேசங்களின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகள் ஏற்கெனவே மருத்துவமனைகளில் அதீத கட்டணம் ஆகியவற்றில் தத்தளித்து வரும் போது மருத்துவமனைகளில் தாங்களே மருந்துக் கடைத் தொடங்கி அதில் நோயாளிகளுக்கான மருந்துகளை வாங்க வேண்டுமென்று வற்புறுத்தப்படுவதால் கடும் நிதி நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றனர்.

மற்ற கடைகளில், வெளியில் வாங்கினால் எம்.ஆர்.பி. விலைகளில் கழிவுகள் 10% முதல் கிடைக்கிறது, ஆனால் மருத்துவமனைகளிலேயே வைத்திருக்கும் பார்மசிகளில் இந்தச் சலுகை கிடையாது. மேலும் அதிகவிலை கொடுத்து வாங்கும் நிலைமைகளும் ஏற்படுகிறது.

ஆகவே இத்தகைய முறைகேடான லாபவேட்டை நடைமுறையையும், நோயாளிகளின் ரத்தத்தை உறிஞ்சும் முறையற்ற நடவடிக்கைகளையும் நோயாளிகள் நலன் கருதி தடை செய்யுமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு வழிகாட்டு நெறிமுறை அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். மருந்துகள் மட்டுமல்லாது மருத்துவ உபகரணங்கள், உட்பட அங்கேயே வாங்க நிர்பந்திக்கப்படுகிறார்கள்.

இது தொடர்பாக தற்போது எந்த ஒரு சட்டமும் இல்லை, கொள்கைச் சட்டகமும் இல்லை. இத்தகைய சட்டங்கள் இல்லாததால் மருத்துவமனைகள் கொள்ளையடிக்கின்றன, மருத்துவமனைகள் என்ற பிற்போக்கு ஆட்சிக்கும் கொஞ்சம் கூட நியாயம், தர்மம், மனித நேயம் இல்லாமல் நடந்து கொள்ளும் மருத்துவ நடைமுறைக்கும் மக்களை நம் ஆட்சிகள் தள்ளியுள்ளன.

என் மனைவி மார்பகப் புற்றுநோயினால் அவதிப்பட்டு வந்தார். அவர் மருத்துவ சிகிச்சை பெற்ற மருத்துவமனையில் இதற்கான ஒரு மருந்தின் விலை ரூ.61,132, இதே நிறுவனத்தின் இதே மருந்து வெளிச்சந்தையில் கழிவுகளுடன் ஊசி மருந்து ஒன்றுக்கு ரூ.50,000 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது.

மேலும் இதே ஊசி மருந்து 4 வாங்கும் போது ஒன்று இலவசமாகக் கிடைக்கிறது. இதனால் ஊசிமருந்தின் விலை ரூ.41,000 தான். ஆனால் மருத்துவமனைகளில் இதே ஊசி மருந்து ரூ.61,132 என்று விற்கப்படுகிறது.

வழக்கறிஞர் விஜய்பால் டால்மியா என்பவர் தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில் இந்தியாவை வாட்டி எடுக்கும் ஒரு பெரிய பிரச்சினையை விவகாரமாக்கியுள்ளார், இதனையடுத்தே மத்திய, மாநில, யூனியன் பிரதேசங்களுக்கு உச்ச நீதீமன்றம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..